சத்து,கொழுப்புசத்து ஆகியவை
காணப்படுகிறது இறாலில் கல்சியம்.
அயடீன்,கொழுப்புசத்து ஆகியன
காணப்படுகின்றன,பாலில் கொழுப்பு
சத்து ,உயிர்சத்து ஆகிய பல சத்துக்கள்
காணப்படுகின்றன. ஆகவே இவை
யாவற்றையும் சேர்த்து செய்யப்பட்ட
முட்டை இறால் தீச்சல் கறி சுத்தமான
சுவையான,சத்தான கறியாக்கும்.இதன்
சுவையை அறிய இக்கறியை செய்து
பார்த்து உண்ணவும்.
தேவையான பொருட்கள்
அவித்த முட்டை - 4
சுத்தமாக்கிய இறால் - 50கிராம்
சிறிதாக நறுக்கிய வெங்காயம்- அரைப்பாதி
கடுகு - சிறிதளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - சிறிதளவு
மிளகாய்த்தூள் - தேவையானளவு
கருவப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
பால் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
செய்முறை
1 . அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதில் எண்ணையை விட்டு
சூடாக்கவும் .
2 .எண்ணெய் சூடான பின்னர் அதில்
சிறிதாக நறுக்கிய வெங்காயம்,கடுகு
,பெருஞ்சீரகம் ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும் .
3 . தாளித்த பின்னர் அவற்றுடன் சுத்தம்
செய்த இறாலை போட்டு கிளறி
ஓரளவு பொரிய விடவும்.
4 .அதன் பின்னர் அவித்த முட்டையை
எடுத்து அதன்ஒருபாகத்தில் சிறிதளவு
கீறவும் .
5 . கீறிய பின்னர் தாளித்து ஓரளவு பொரிந்த
இறாலுடன் போட்டு எல்லா பக்கமும்
திருப்பி போட்டு சிறிது நேரம் பொரிய
விடவும் .
6 .சிறிது நேரம் பொரிந்ததும் அதனுடன்
மிளகாய்த்தூள்,உப்பு, கருவப்பிலை
ஆகியவற்றை போட்டு மிளகாய்த்தூளின்
பச்சைவாடை (மணம் )போகும் வரை
பொரிய விடவும் .
7 . அதன் பின்னர் இவற்றுடன் பால்,உப்பு
ஆகியவற்றை போட்டு பிரட்டி வேக
விடவும்
8 .இவையாவும் வெந்த பின்னர் இவற்றுடன்
பழப்புளி அல்லது தேசிகாய்(எலுமிச்சம்
பழ)சாறு ஆகியவற்றை போட்டு
பிரட்டி வேக விடவும்.
9 . இவையாவும் வெந்த பின்னர் சுத்தமான
சுவையான சத்தான முட்டைஇறால்
தீச்சல் கறி தாயாராகிவிடும்.
10 .முட்டைஇறால் தீச்சல் கறி தயாரான
பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை ) வைத்து அதனுடன்
முட்டைஇறால் தீச்சல் கறியை
வைத்து பரிமாறவும்.
குறிப்பு
இருதய நோயாளர் வைத்தியரின்
அனுமதியுடன் உண்ணவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.