இறாலில் கல்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள்
உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்
படுகிறது. இறாலில் காணப்படுகிற கொழுப்பானது நல்ல
கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்த
தால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.அத்துடன் இப்படிப்பட்ட இறாலுடன்
மருத்துவ பொருளான மஞ்சள் தூள்,மிளகுத்தூள்,இஞ்சி
விழுது,உள்ளி(பூண்டு) விழுது ஆகியவை யாவும் கலந்து
செய்யப்பட்ட இறால்சிப்ஸானது மிகமிக சுவையானது
சுத்தமானது சத்துமிக்கது அத்துடன் அசைவ உணவு
பிரியர்கள் மிகமிகவிருப்பி உண்ணக்கூடியஉணவுஇறால்
சிப்ஸ்ஆகும் .
தேவையான பொருட்கள்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டிதேவையான பொருட்கள்
கழுவி சுத்தம் செய்த இறால் - ஒரு கப்
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு) விழுது - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி(விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அடித்தவெள்ளை கருமுட்டை - தேவையானளவு
(காய்ந்த )பாண் (ரஸ்க்) தூள் -தேவையான அளவு
செய்முறை
இறாலை போடவும்.
2 .அதன் பின்னர் அதனுடன் மஞ்சள்தூள்,உப்பு,
இஞ்சிவிழுது,உள்ளி(பூண்டு)விழுது,(விரும்பினால்)
அஜினோமோட்டோ,மிளகுத்தூள் ஆகியவற்றை
போடவும்.
3 .போட்ட பின்னர் இவை யாவற்றையும் சேர்த்து
கலந்து லேசாக பிசறி ஒரு மணி நேரம்
ஊறவைக்கவும்.
4 .அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டை
வெள்ளைக்கருவை போட்டு அடிக்கவும்.
5 .அதன் பின்பு ஒரு தட்டில் (காய்ந்த )பாண்
(ரஸ்க்) தூளை போடவும்.
6 .அதன் பின்னர் மசாலா கலந்து ஊறிய ஒரு
இறாலை எடுத்து லேசாக நசுக்கவும்.
7.லேசாக நசுக்கிய இறாலை அடித்த வெள்ளைகரு
முட்டையில் நனைக்கவும்.
8 .வெள்ளைக்கரு முட்டையில் நனைத்த இறாலை
பாண் தூளில் போட்டு பிரட்டவும்.
9.அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை (வாணலியை )
வைத்து சூடாக்கவும்.
10 .சூடாக்கிய பின்னர் எண்ணையை விட்டு நன்றாக
சூடாக்கவும்.
11 .எண்ணெய் நன்றாக சூடான பின்னர் அதில் மசாலா
கலந்து பாண் தூளில் போட்டு பிரட்டிய இறாலை
.எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
12 .பொரித்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான
இறால் சிப்ஸ் தயாராகிவிடும்.
13 .அதன் பின்பு ஒரு தட்டில் தேவையாளவு சுத்தமான
சுவையான சத்தான இறால்சிப்ஸ் வைத்துஅதனுடன்
தக்காளி சோஸ் அல்லது வேறு ஏதாவது சோசை
வைத்து பரிமாறவும் .
கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
சோற்றுடனும்(சாதம்) சாப்பிடலாம் அல்லது
தனியாகவும் சாப்பிடலாம்.
(2)
எச்சரிக்கை -
இறால் அலர்ஜி உடையோர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.
(3)மாற்று முறை -
விரும்பினால் முட்டைக்கு பதிலாக
கடலைமாவை தண்ணீரில் கரைத்தும்
(பட்சிமா பதம்) பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.