கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 26 செப்டம்பர், 2011

யாழ்ப்பாணம்


குலசேகர சிங்கையாரியன்

குலசேகர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் முதல்வனான கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் மகனாகிய இவன் கி.பி 1246 தொடக்கம் 1256 ஆம் ஆண்டுவரை பத்தாண்டு காலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான்.இவன் ஆட்சி முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகவும்,  நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன் வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்ததாகவும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. குலசேகர சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகனான குலோத்துங்க சிங்கையாரியன் அரசனானான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.