கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 19 அக்டோபர், 2011

ராசிபலன்-14.10.11-20.10.11


வார ராசிபலன்: 14-10-2011 முதல் 20-10-2011 வரை

மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.
சூரியன், சனி ஆகியோர் 6-ல் உலவுவது கோசாரப்படி சிறப்பாகும். என்றாலும் சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் பகைவர்கள் ஆவார்கள் என்பதால் எதிர்ப்புக்கள் இருக்கவே செய்யும். மக்களாலும், வேலையாட்களாலும் அதிகம் அனுகூலத்தை எதிர்பார்க்க இயலாது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலமான போக்கைக் காணலாம். தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உழைப்புக்குரிய பயனைப் பெற்று வருவார்கள். 5, 7, 9-ஆம் இடங்களையும், புதன், சுக்கிரன் ஆகியோரையும் ஜன்ம ராசியில் உள்ள குரு பார்ப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். தந்தையால் அளவோடு நலம் ஏற்படும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும், 4-ல் செவ்வாயும் உலவுவதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. 17-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத்துணைவரால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது. கூட்டுத் தொழிலில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: அக்.16, 17, 19.
திசைகள்: மேற்கு, கிழக்கு.
எண்கள்: 1, 8. 
ரிஷபம்: கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய. 

செவ்வாய், புதன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும், குரு வக்கிரமாக இருப்பதாலும் எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். பொருள்வரவு கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். ஜலப்பொருட்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். குடும்ப நலம் சீராகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தாய் மாமனால் நலம் கூடப் பெறுவீர்கள். பிரச்னைகள் குறையும். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. 5-ல் சூரியனும் சனியும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். பெற்றோருக்கும் மக்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மக்களின் நடத்தையைக் கண்காணிக்கவும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறுவதால் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: அக்.16, 17, 19 (பிற்பகல்).

திசை: வடக்கு, தெற்கு.
எண்: 3, 5, 8, 9. 


மிதுனம்: மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய. 

ராசிநாதன் புதனும் சுக்கிரனும் ஒன்று கூடி 5-ல் அமர்ந்து, குருவின் பார்வையைப் பெறுவது விசேடமாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது இனிது நிறைவேறும். பண வரவு அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பரம்பரை பரம்பரையாகச் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். 6-ல் உள்ள ராகு மனத்தில் துணிவை வழங்குவார். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். 2-ல் செவ்வாயும் 12-ல் கேதுவும் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. பிறரிடம் சுமுகமாகப் பழகவும். 4-ல் சூரியனும் சனியும் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவதால் மக்களாலும் சகோதரராலும் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். என்றாலும் குரு பார்வை இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.
அதிர்ஷ்ட தேதிகள்: அக்.16, 17 (இரவு), 19 (பிற்பகல்).
திசை: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.
எண்: 3, 4, 5, 6.
கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய. 
சூரியன், சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும், குரு 10-ல் இருந்தாலும் வக்கிர கதியில் உலவுவதாலும் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கும், எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் துறையினருக்கும் வெற்றிகள் குவியும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சமுதாய நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகமாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். வாழ்க்கைத்துணைநலம் சீராகும். சுகானுபவம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். 9-ஆம் தேதி முதல் புதன் 4-ஆமிடம் மாறி, 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் சுய தொழிலில் வளர்ச்சி காணலாம். நண்பர்களும் உறவினர்களும் உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாய் இருப்பார்கள். 5-ல் ராகுவும், ஜன்ம ராசியில் செவ்வாயும், குரு வக்கிரமாகவும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் பயனிராது.

அதிர்ஷ்ட தேதி: அக். 7 (பகல்), 11, 13.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

எண்கள்: 1, 3, 6, 7, 8.
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய. 

குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். தோற்றப்பொலிவு கூடும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். தொலைதூரப் பயணம் நலம் தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். தர்மப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான பாதை தெரியவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். 2-ல் சூரியனும் சனியும் இருப்பதால் குடும்ப நலனில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் அவசியமாகும். கண், வயிறு, முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். புதன் 3-ல் இருப்பதால் வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். 4-ல் உள்ள ராகுவும், 12-ல் உலவும் செவ்வாயும் சுகத்தைக் குறைப்பார்கள். அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும். வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வதுடன், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் நல்லது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறி, நீசபங்கம் பெற்று, குருவின் பார்வையையும் பெறுவதால் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். தந்தை நலம் சீராகும்.
அதிர்ஷ்ட தேதிகள்: அக். 16, 17, 19 (பிற்பகல்).
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
எண்கள்: 3, 6, 7.
கன்னி: உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய. 
புதனும், சுக்கிரனும் 2-ல் ஒன்று கூடியிருப்பது மகாயோகமாகும். 2-ஆமிடத்தைக் குரு பார்ப்பதும் சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சில் இனிமை கூடுவதுடன் திறமையும் வெளிப்படும். பல வழிகளில் பணம் வந்து சேரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். வியாபாரம் பெருகும். பேச்சின் மூலம் ஜீவனம் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். முக வசீகரம் கூடும். குடும்பத்தாரால் நலம் உண்டாகும். 3-ல் ராகு இருப்பதால் அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் ஆதாயம் அதிகம் கிடைக்கும். 8-ல் குரு வக்கிரமாக இருப்பதால் கணவன் மனைவி உறவுநிலை சீராகும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். 9-ல் கேது இருப்பதாலும் சூரியனின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததாலும் தந்தையால் அதிகம் அனுகூலமிராது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். சனி ஜன்மத்தில் இருப்பதால் வேலைப்பளு அதிகமாகும். தலை சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். 11-ல் செவ்வாய் இருப்பதால் மனத்துணிவும் தன்னம்பிக்கையும் பெருகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. பேச்சில் நிதானம் தேவை. குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
அதிர்ஷ்ட தேதி: அக். 16, 17, 19 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 4, 5, 6, 9.
துலாம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய. 
ராசிநாதன் சுக்கிரன் ஜன்ம ராசியில் வலுத்திருப்பதால் உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். செல்வப் பெருக்கு ஏற்படும். மன உற்சாகம் கூடும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் ஈடேறும். வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். சுய முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். குரு 3, 11-ஆம் இடங்களையும் ஜன்ம ராசியையும் சுக்கிரன், புதன் ஆகியோரையும் பார்ப்பதால் உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பெரியவர்களது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். தெய்வ காரியங்கள் நிறைவேறும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். செவ்வாய் 10-ல் இருப்பதால் மனத்துணிச்சல் கூடும். காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். நிலபுலங்கள் லாபம் தரும். திரவப் பொருட்கள் மூலம் வருமானம் கிடைத்து வரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் தடைகளும் குறுக்கீடுகளும் அவ்வப்போது ஏற்படும். சர்ப்ப சாந்தி செய்யவும். 12-ல் சூரியனும் சனியும் இருப்பதால் கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகவும். 17-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் உஷ்ணாதிக்கம் கூடும். மேலதிகாரிகள், முக்கியஸ்தர்கள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: அக். 17 (இரவு), 19 (பிற்பகல்).
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 6, 9.
விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய. 
சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும், குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக உலவுவதாலும் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள். மனோபலம் கூடும். உடல்நலம் சீராகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கவே செய்யும். பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள் லாபம் தரும். தோட்டங்கள், சுரங்கங்கள், ஆலைகள், தொழிற்சாலைகளில் தொழில் புரிபவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். செவ்வாய், புதன், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் குறுக்கீடுகளும் தடைகளும் இருக்கும். சுய பலம் குறையும். வியாபாரத்தில் சரிவு ஏற்படும். விழிப்புடன் இருப்பது நல்லது. பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். 17-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவதால் தொழிலில் அதிக கவனம் தேவை. கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும்.
அதிர்ஷ்ட தேதிகள்: அக்.16, 17 (பகல்).
திசைகள்: கிழக்கு, மேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 2, 6, 8.
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய. 
சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் சுயபலம் கூடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற இனங்களால் வருமானம் அதிகமாகும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். தந்தையால் நலம் பெருகும். பிதுரார்ஜித சொத்துக்கள் சேரும். மாணவர்களது திறமை பளிச்சிடும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு வெளியூர், வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உருவாகும். கூட்டாளிகள் நல்லவிதமாக நடந்து கொள்வார்கள். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு அதிகமாகும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். 8-ல் செவ்வாயும், 12-ல் ராகுவும் இருப்பது குறை ஆகும். குறிப்பிட்ட கிரகங்களுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வதன் மூலம் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: அக். 16, 17, 19 (பிற்பகல்).
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 8.
மகரம்: உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய. 
புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றலும் தோற்றப்பொலிவும் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் இனிது நிறைவேறும். எதிர்ப்புக்கள் குறையும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். தரகர்களுக்கும் ஏஜண்டுகளுக்கும் கமிஷன் அதிகம் கிடைக்கும். மாணவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். மறுமணத்துக்காகக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பால் ஆதாயம் கிடைக்கும். பயண சம்பந்தமான இனங்களால் வருமானம் கூடும். தோல் பொருட்கள் லாபம் தரும். குரு 4-ல் வக்கிரமாக இருப்பதால் அலைச்சல் கூடும். 5-ல் கேது இருப்பதால் மக்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். செவ்வாய் 7-ல் இருப்பதால் வாழ்க்கைத்துணைவரால் சலசலப்புகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் பழகிவருவது நல்லது. சிலருக்குப் புதியசொத்துக்கள் சேரும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவதால் அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்கு தென்படும்.
அதிர்ஷ்ட தேதிகள்: அக். 16, 17, 19 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
எண்கள்: 4, 5, 6.
கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய. 
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும், குரு 3-ல் இருந்தாலும் வக்கிர நிலையில் சஞ்சரிப்பதாலும் உங்கள் ஆற்றல் பெருகும். எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். மாணவர்களது நிலை உயரும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் கூடிய வேலை கிடைக்கும். பயணம் செய்வதில் ஈடுபாடு அதிகமாகும். புதியவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பண நடமாட்டம் கூடும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். 4-ல் கேது இருப்பதால் தாய் நலனில் கவனம் தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் சூழும். 8-ல் சூரியனும் சனியும் இருப்பதால் வேலைப்பளு கூடும். மறைமுக எதிரிகளால் சங்கடங்கள் ஏற்படும். என்றாலும் சமாளிப்பீர்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வேலையாட்களாலும், தந்தையாலும் மன அமைதி கெடும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு, விலகும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.வாழ்க்கைத்துணைவரின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்ட தேதிகள்: அக். 16, 17, 19 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
எண்கள்: 4, 5, 6, 9.
மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய. 
புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிடும். இனிமையாகவும் திறமையாகவும் பேசுவீர்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். மாணவர்களது நிலை உயரும். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் மதிப்பு உயரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 5-ல் செவ்வாயும், 7-ல் சூரியன், சனி ஆகியோரும், 9-ல் ராகுவும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு பிரச்னைகள் சூழும். தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். யாரிடத்திலும் சுமுகமாகப் பழகுவது நல்லது. நல்ல அணுகுமுறையின் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். 17-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவதால் உடல்நலனில் கவனம் தேவைப்படும். உஷ்ணாதிக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் காரியமாற்றுவது அவசியமாகும். எதிலும் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: அக். 16, 17, 19 (பிற்பகல்).
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, வடமேற்கு.
எண்கள்: 3, 5, 6, 7.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.