கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 7 அக்டோபர், 2011

மாத ராசிபலன்


2011 அக்டோபர் 1 முதல் 31 வரை

மேஷம்: 
சூரியன், புதன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிர்வாகத்திறமை கூடும். அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்களைப் பெற வாய்ப்புக் கூடிவரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை. சிற்பம், ஓவியம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு உண்டாகும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். தொழிலாளர்களது கோரிக்கைகள் ஒன்றிரண்டு ஈடேறும். விவசாயிகளுக்கு வரவு அதிகரிக்கும். தோல் பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், பூமியிலிருந்து வெளிவரும் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். குரு வக்கிரமாக இருப்பதாலும், 2-ல் கேது சஞ்சரிப்பதாலும் பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. 8-ல் ராகு உலவுவதால் பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும். 4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலம் சீராகும்.

பண நடமாட்டம் அதிகரிக்கும். 9-ஆம் தேதி முதல் புதன் 7-ஆமிடம் மாறுவதால் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். 18-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்; பக்குவமாகப் பேசிச் சமாளிப்பது நல்லது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறி, ராகுவுடன் கூடுவதால் வாகனப் பயணத்தின்போது விழிப்பு தேவை. கலைஞர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 29-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவதால் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். மறைமுக நோய்நொடிகள் ஏற்படும். 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ஆம் இடம் மாறினாலும் குருவின் பார்வையைப் பெறுவதாலும் ராசிநாதனாகையாலும் நலம் புரிவார். மக்கள் நலம் சீராகும். எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7, 9, 16, 17, 24, 26, 31 (முற்பகல்).

திசைகள்: மேற்கு, கிழக்கு, வடக்கு.

எண்கள்: 1, 5, 8. 

ரிஷபம:
செவ்வாய் 3-ல் உலவுவதாலும், புதனும் சுக்கிரனும் 5-ல் சஞ்சரிப்பதாலும், குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதாலும் உங்கள் சுயபலம் கூடும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பொறியியல்துறை லாபம் தரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். திரவப் பொருட்கள் ஆதாயம் தரும். பண வரவு திருப்தி தரும். எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் உருவாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். முக்கியமான எண்ணங்களில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும்.

புதிய சொத்துக்களை வாங்க வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனங்களால் வருமானம் கிடைக்கும். ஜன்ம ராசியில் கேது இருப்பதால் வீண் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. 7-ல் ராகு இருப்பதால் பயணத்தால் முழுமையான பயன் பெற இயலாமல் போகும்.
4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உடல்நலனில் கவனம் தேவைப்படும். 9-ஆம் தேதி முதல் புதன் 6-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருந்துவரும். எதிரிகள் கூட உதவுவார்கள். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். 18-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறுவதால் அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்கைக் காணலாம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. கூட்டாளிகளால் சில பிரச்னைகள் சூழும். 29-ஆம் தேதி முதல் புதன் 7-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. யாரிடத்திலும் சுமுகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறுவதால் அலைச்சல் அதிகரிக்கும்.
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 6, 7, 9, 16, 17, 24, 26.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

எண்கள்: 5, 6, 9. 


மிதுனம்:புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். நண்பர்களும், உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். புதிய சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். மாணவர்களது திறமை பளிச்சிடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். மதிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் நலம் உண்டாகும். பொருளாதார நிலையில் விசேடமான அபிவிருத்தி காண வாய்ப்புக் கூடிவரும்.
மக்களால் நலம் உண்டாகும். மனத்துக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். கூட்டாளிகள் சாதகமாக நடந்து கொள்வார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பயணத்தின் மூலம் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். 2-ல் செவ்வாயும் 12-ல் கேதுவும் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.

4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதால் மக்களால் உங்கள் மதிப்பு உயரும். மகப்பேறு பாக்கியமும் கூடிவரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். காதல் மலரும். சுப காரியங்கள் நிகழும். 9-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் ராசிநாதன் என்ற வகையில் நலம் புரிவார். மக்களால் நலம் கூடப் பெறலாம். 18-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவதால் செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிகம் அக்கறை செலுத்துவது அவசியம். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவதால் மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் பிரச்னைகள் சூழும். 29-ஆம் தேதி முதல் புதன் 6-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெற்றிகள் குவியும்.
புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 7(இரவு), 9, 16, 17, 24, 26, 31 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு.

எண்கள்: 3, 4, 5, 6.


கடகம்:

சூரியன், சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் குரு 10-ல் இருந்தாலும் வக்கிரமாக உலவுவதாலும் உங்கள் ஆற்றல் வெளிப்படும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசாங்கத்தில் உயர் அதிகாரத்தில் உள்ளவர்களது தொடர்பால் அனுகூலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களாலும், தந்தையாலும், அரசாங்கத்தாலும் உதவிகள் கிடைக்கும். பிதுரார்ஜித சொத்துக்களைப் பெற வாய்ப்பு உண்டு. குடும்ப நலம் சீராகவே இருந்துவரும்.
கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மகசூல் கூடும். தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளில் ஒன்றிரண்டு ஈடேறப் பெறுவார்கள். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். பொருளாதார நிலை திருப்தி தரும். கடன் தொல்லை குறையும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.

போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். உயர் பொறுப்புகள் கிடைக்கும். மன உற்சாகம் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும்.

4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறி வலுப்பெறுவதால் சுகம் கூடும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வாகன யோகம் உண்டாகும். 9-ஆம் தேதி முதல் புதன் 4-ஆமிடம் மாறுவதால் சொந்தத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். தரகர்கள், ஏஜெண்டுகள் ஆகியோருக்கெல்லாம் வருமானம் அதிகமாகும். தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் நலம் உண்டாகும். 18-ஆம் தேதி முதல் சூரியன் 4 -ஆமிடம் மாறுவதால் அலைச்சல் கூடும். என்றாலும் அதற்கான பயனும் கிடைத்துவரும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதும் சிறப்பே ஆகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். 29-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ஆமிடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் பொருளாதார நிலை உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும்.

புனர்பூசம், பூச நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7(பகல்), 16, 17, 24, 26, 31 (முற்பகல்).

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 8. 


சிம்மம்: 
புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் இனிமையாகவும் திறமையாகவும் பேசுவீர்கள். குடும்ப நலம் சிறக்கும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருமானம் வந்து சேரும். மனத்துக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். 2-ல் சூரியனும் சனியும் இருப்பதாலும், 4-ல் ராகுவும், 12-ல் செவ்வாயும் உலவுவதால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகளும் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை.

வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன் கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. இயந்திரப்பணியாளர்களும் இஞ்சினீயர்களும் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் மனோபலம் கூடும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும். மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.

கடிதப்போக்குவரத்து நற்செய்தி கொண்டுவரும். 9-ஆம் தேதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் விழிப்புத் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால்தான் ஓரளவாவது முன்னேற முடியும். 18-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவதால் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4 -ஆமிடம் மாறுவதால் புதிய பொருட்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். 29-ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். 30-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் மக்களாலும் பெற்றோராலும் நலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும்.

மக நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7, 9, 16, 17, 24, 26, 31 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

எண்கள்: 1, 3, 5, 6, 7.


கன்னி: 
செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் குரு 8-ல் இருந்தாலும் வக்கிரமாக உலவுவதாலும் உங்கள் சுய பலம் கூடும். துணிவோடும் தன்னம்பிக்கையோடும் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். செயலில் வேகமும் திறமையும் கூடும்.
போக்குவரத்துச் சாதனங்களால் ஆதாயம் அதிகமாக கிடைத்துவரும். வியாபாரிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைஞர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். மாதர்கள் தங்கள் குறிக்கோள் நிறைவேறப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். வீண் செலவுகள் குறைந்து, பொருள்வரவு கூடும். மக்களால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். உழைப்பு வீண்போகாது. 9-ல் கேதுவும் ஜன்ம ராசியில் சூரியனும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் பண வரவு மேலும் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பேச்சில் இனிமை தவழும். முக வசீகரம் கூடும். 9-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகும். வியாபாரத்தில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். வாக்கு வன்மை கூடும். பேச்சின் மூலம் ஜீவனம் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். 18-ஆம் தேதி முதல் சூரியன் 2 -ஆமிடம் மாறுவதால் குடும்ப நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். கண் உபத்திரவம் ஏற்படும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். 29-ஆம் தேதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும். மாணவர்களுக்குப் பிரச்னைகள் சூழும். செய்தொழிலில் முழுக்கவனம் தேவை. 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சகோதர நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும்.

ஹஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7, 9, 16, 17, 24, 26, 31 (முற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு, வடக்கு.

எண்கள்: 4, 5, 6, 9. 


துலாம்:
செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் மனதில் துணிவு பிறக்கும். எதிரிகளை முறியடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பண வரவு அதிகமாகும். உடன்பிறந்தவர்கள் தக்க தருணத்தில் உதவி புரிய முன்வருவார்கள். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, சொத்துக்களால் வருமானமோ கிடைக்கும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் அதிகம் பெறலாம்.
2-ல் ராகுவும், 8-ல் கேதுவும், 12-ல் சூரியன், புதன், சனி ஆகியோரும் இருப்பதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. அரசியல், நிர்வாகம், வியாபாரம், அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
வீண்வம்பு கூடாது. பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. அரசாங்கத்தாராலும், தந்தையாலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் செலவுகள் ஏற்படும்.
4-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் உடல் நலம் சீராகும். மன உற்சாகம் பெருகும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். ஆடவர்களுக்குப் பெண்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். 9-ஆம் தேதி முதல் தந்தையால் நலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 18-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவதால் உஷ்ணாதிக்கம் அதிகரிக்கும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் பண நடமாட்டம் அதிகமாகும். குடும்ப நலம் சீராகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். 29-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவதால் செல்வ நிலையில் அபிவிருத்தி காணலாம். பல வழிகளில் வருமானம் வந்து சேரும். 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும், குடும்பத்தாராலும் நலம் பல பெறுவீர்கள். செயலில் வேகம் கூடும். காரியங்களில் எளிதில் நிறைவேறும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7, 9, 24, 26, 31 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.

எண்கள்: 3, 6, 9.



விருச்சிகம்: 
6-ல் குரு உலவினாலும் கூட வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். 11-ல் சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகியோர் சஞ்சரிப்பதும் சிறப்பாகும். இதனால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும்.

பண வரவு அதிகமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசுப்பணியாளர்களது நிலை உயரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும்.

மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புக் கூடிவரும். வியாபாரிகள் லாபம் கூடப் பெறுவார்கள். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு உருவாகும். நண்பர்களும், உறவினர்களும் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். பெண்களால் நலம் உண்டாகும். தொழிலில் விசேடமான வளர்ச்சி காணலாம். நிலபுலங்கள் லாபம் தரும். முயற்சி வீண்போகாது.

உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும்.

4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் செலவு செய்வீர்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். 9-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். 18-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவதால் தொழிலில் அதிக அக்கறை தேவை. அரசு விவகாரங்களில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் பொருள் சேரும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். 29-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. 30-ஆம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 10-ஆமிடம் மாறி, உங்கள் ஜன்ம ராசியைப் பார்க்கப்போவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7, 9, 16, 17 (பகல்), 24, 26, 31 (முற்பகல்).

திசைகள்: மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

எண்கள்: 1, 3, 5, 6, 8. 


தனுசு:
சூரியன், புதன், குரு, சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும். நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம்.
கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.
கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். தடைப்பட்டிருந்த காரியங்கள் கூட இப்போது நிறைவேறும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். 8-ல் செவ்வாயும், 12-ல் ராகுவும் உலவுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். நீர் நிலைகளின் பக்கம் நெருங்கும்போது எச்சரிக்கை தேவை. ஜலப்பயணத்தால் சங்கடத்துக்கு ஆளாக நேரலாம்.

4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள்,

அலங்காரப்பொருட்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். எதிரிகள் கூட இப்போது உதவி புரிவார்கள். 9-ஆம் தேதி முதல் புதன் 11-ஆமிடம் மாறுவதால் வாழ்க்கைத்துணைவரால் அதிக நலம் உண்டாகும்.

கூட்டுத் தொழில் லாபம் தரும். 18-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் தந்தையாலும் அரசாங்கத்தாராலும் நலம் கூடப் பெறலாம். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் எதிர்பாராத பொருள் சேர்க்கை நிகழும். 29-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவராலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படும். 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் 5-ஆம் வீட்டோன் 9-ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் மக்கள் நலமும் சகோதர நலமும் சீராகும். வீண் செலவுகள் குறையும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7, 9, 16, 17, 24, 26, 31 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 8. 


மகரம்:
சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் தோற்றப்பொலிவு கூடும். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். வியாபாரம் ஆதாயம் கொண்டுவரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாய் இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.

பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஜலப் பிரயாணம் லாபம் தரும். போக்குவரத்துச் சாதனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் அதிகம் பயன் பெறலாம்.

தொலைதூரத் தொடர்பு பயன் தரும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். புதிய நிலம், மனை, வீடு, வாகனம் வாங்க வாய்ப்புக் கூடிவரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.

குரு 4-ல் வக்கிரமாகவும், கேது 5-லும் இருப்பதால் மக்களின் நடத்தையில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மறதி உண்டாகும். செவ்வாய் 7-ல் இருப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு சலசலப்புகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் பழகிவருவது நல்லது.

4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும், உங்கள் ராசிக்கு யோக காரகனான சுக்கிரன் ஆட்சி பலம் பெற்று 10-ல் உலவுவதால் தொழிலில் அபிவிருத்தி காணலாம். 9-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறி சுக்கிரனுடன் கூடுவதால் முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

எதிர்ப்புகள் விலகும். சுகம் கூடும். புதிய சொத்துக்கள் சேரும். 18 -ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவதும் அனுகூலமாகும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் போக்குவரத்து இனங்களால் அதிக லாபம் கிடைக்கும். 29-ஆம் தேதி முதல் புதன் 11-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். பிரச்னைகள் எளிதில் தீரும். 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7, 9, 16, 17, 24 (இரவு), 26, 31 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

எண்கள்: 4, 5, 6. 


கும்பம்:
செவ்வாய் 6-லும், ராகு 10-லும் உலவுவது சிறப்பாகும். இதனால் உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பொறியியல் துறை லாபம் தரும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.

வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். பயணத்தால் ஓரிரு காரியங்கள் சுலபமாக நிறைவேறும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பண வரவு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். குறிப்பாக சகோதரியால் அதிகம் நலம் பெறுவீர்கள். குரு 3-ல் இருந்தாலும் வக்கிர கதியில் இருப்பதாலும், புதன் 8-ல் வலுத்திருப்பதாலும் அறிவாற்றல் கூடும்.
மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். குடும்ப நலம் சீராகும்.

வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். ராசிநாதன் 8-ல் இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். அலைச்சல் கூடும். சூரிய பலம் குறைந்திருப்பதால் வாழ்க்கைத்துணை நலனிலும் தந்தை நலனிலும் கவனம் தேவை.

4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால் சுபிட்சம் கூடும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகள் நிறைவேறும். 9-ஆம் தேதி முதல் புதன் 9-ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகமாகும். மக்களால் மன மகிழ்ச்சி பெருகும். மகன் அல்லது மகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். சகோதர நலம் சிறக்கும். 18-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது.

வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியம் பாதிக்கும். 29-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதால் தொழிலில் அபிவிருத்தி காணலாம். 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவதால் பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7, 9, 16, 17, 24 (முற்பகல்), 26 (பிற்பகல்), 31 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

எண்கள்: 4, 5, 6, 9. 


மீனம்: 

குரு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் சுய பலம் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். பிரச்னைகளை சுலபமாகத் தீர்த்துக் கொள்வீர்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். செல்வாக்கு பெருகும். பண நடமாட்டம் அதிகமாகும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆதரவு கிட்டும். பக்தி மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு அதிகமாகும். அதனால் மனத்தில் தெளிவும் பிறக்கும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். பேச்சாளர்கள், மத போதகர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். வருமானம் அதிகமாகும். தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். 10-ஆம் வீட்டோன் குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை நல்லவிதமாக அமையும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். திரவப் பொருட்களால் வருமானம் கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு ஓரளவு பயன்படும்.

7-ல் உள்ள கிரகங்களால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அனுசரித்துப் போகவும்.

கூட்டாளிகளை நம்பி ஏமாற வேண்டாம். 4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கலைஞர்களுக்கு மந்த நிலை விலகும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். 9-ஆம் தேதி முதல் ப்தன் எட்டாமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் சேரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 18-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவதால் மறைமுக நோய்நொடி உபாதைகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அரசாங்கத்தாரால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால் தொலைதூரத் தொடர்புஆல் அனுகூலம் உண்டாகும்.
29-ஆம் தேதி முதல் புதன் 9-ஆமிடம் மாறுவதால் வாழ்க்கைத்துணை நலம் சீராகும். 30-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவதால் உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். எடுத்த காரியங்களில் சுலபமாக வெற்றி பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 3, 6, 7, 9, 16, 17, 24 (முற்பகல்), 31 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு.

எண்கள்: 3, 7.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.