கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 15 டிசம்பர், 2014

2014-2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் -2



திலும் முதலிடத்தை விரும்பும் மேஷ ராசி நேயர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரை 8ம் வீட்டில் இருந்து செயல்படப் போகிறார் சனி பகவான். குடும்ப விஷயங்களில் மற்றவர்களை அனுமதிக்காதீர்கள்.
அதேநேரம், உங்களின் குறைகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளுங்கள். பேச்சில் கவனம் தேவை. இரவில், சொந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்கவும். எவருக்காகவும் ஜாமின் கொடுக்க வேண்டாம். நெருங்கிய உறவினர், நண்பர்களிடமும் இடைவெளிவிட்டுப் பழகவும்.
சொத்துப் பிரச்னைக்காக கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும்.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. சட்டத்துக்குப் புறம்பான வகையில் எவருக்கும் உதவ வேண்டாம்.  
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரையிலும் உங்களின் பாக்கியாதிபதி குருவின் சாரத்தில், விசாகம் 4ம் பாதத்தில், 8ம் வீட்டில் சனி செல்கிறார். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். எனினும் அஷ்டமத்து சனி என்பதால், அலைச்சல் அதிகமாகும். முன்கோபம் வேண்டாம். ஆபரணங் களை கவனமாகக் கையாளுங்கள்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு கண்டகச் சனியாக 7ம் வீடான துலாம் ராசி விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு,
அடிவயிற்றில் வலி, ஃவைப்ராய்டு பிரச்னைகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகத்தில் சனி வக்கிரத்துடன் செல்வதால், புது முதலீடுகள் வேண்டாம்.பங்குதாரர்களுடன் பிரச்னை வரலாம். சிலர் உங்களுக்கு உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்கவைப்பார்கள்.
உங்கள் பாதகாதிபதியான சனி தனது சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்கிறார். இந்த காலகட்டத்தில் மனஉளைச்சல், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும்.சிலர், உங்கள் மீது வீண் பழி சுமத்த முற்படுவர். கடன் பிரச்னை பயம் தரும்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்தில் வக்கிரம் ஆவதால், ஆரோக்கிய குறைவு ஏற்படும். பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டாகும்.      
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் திருதியாதிபதியும்சஷ்டமாதி பதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்கிறார். இளைய சகோதரருக்கு உடல் நிலை பாதிப்பு, அவருடன் கருத்துமோதல்கள் வரும். வழக்கு, கடன் அச்சம் தரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், பழைய சிக்கல்கள் தீரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும்.
சனி ராசிக்கு 2ம் வீட்டைப் பார்ப்ப தால் சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். ஆனால், சிலநேரம் அதுவே பாதகமா கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். சனி பகவான் 5ம் வீட்டைப் பார்ப்பதால், சுற்றியுள்ளவர்கள் ஏமாற்றுவதாக நினைப்பீர்கள். பூர்வீகச் சொத்தை போராடிப் பெறுவீர்கள். சனி 10ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று மொழிக் காரர்களால் திருப்பம் உண்டு.
வியாபாரத்தில் போட்டிகள், இழப்பு கள் உண்டு. புதியவரை நம்பி பெரிய  முதலீடுகள் செய்யவேண்டாம்.பங்கு தாரர்களில் சிலர், பங்குப் பணத்தைக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு, கட்டட உதிரி பாகங்கள், பெட்ரோ கெமிக்கல் வகைகள் ஆதாயம் தரும்.
உத்தியோகத்தில் வேலைப்பளு, மன உளைச்சல் உண்டு. சிலர் உங்கள் மீது பொய் வழக்குப் போடுவார்கள். புது வாய்ப்புகளும், சலுகைகளும் சற்று தாமதமாகக் கிடைக்கும்.
கன்னிப் பெண்கள், புதிய நண்பர் களைத் தவிர்க்கவும். எதிலும் பெற்றோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவர்கள் விருப்பப்பட்ட கல்விப் பிரிவில் சேர, சிலரது சிபாரிசுகளை நாடவேண்டியது வரும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஒருபுறம் மன உளைச்சலை தந்தாலும், மறுபுறம் வாழ்வின் நெளிவு சுளிவுகளைக் கற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: பூச நட்சத்திர நாளில் அல்லது பிரதோஷ நாளில், குச்சனூர் சென்று ஸ்ரீசுயம்பு சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.

டந்துவந்த பாதையை மறவாத ரிஷப ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரை உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் நுழைந்து பலன் தரப் போகிறார், சனிபகவான். '7வது வீடு எனில் கண்டகச் சனி ஆயிற்றே’ என்று பயம் வேண்டாம். அவர், உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் நல்லதே செய்வார்.
எனினும், களத்திர ஸ்தானமான 7ல் சனி அமர்வதால், சிலருக்குத் திருமணம் தள்ளிப்போகும்.தம்பதிக்குள் பிரிவு ஏற்படக்கூடும்.  விட்டுக்கொடுத்துப் போகவும். மனைவி சுட்டிக்காட்டும் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். புதியவர்களை வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம்.
முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறி ஞரை ஆலோசித்து  முடிவெடுங்கள்.அரசு வரிகள் செலுத்துவதில் தாமதம் வேண்டாம். தீய நட்பைத் தவிர்க்கவும். எவரிடமும் வரம்பு மீறி பேசவேண்டாம்.உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய நேரிடும்.
வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் அஷ்டம லாபாதிபதியான குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 7ம் வீட்டில் சனி செல்வதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவர்வழி உறவினருடன் பிணக்குகள், சிறு விபத்துகள், மூச்சுத் திணறல், வேலைப்பளு வந்துபோகும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீடான துலாம் ராசி விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், எவரை நம்புவது என்று  குழப்பம் ஏற்படும். ஒரு சொத்தை விற்று மறுசொத்தை காப்பாற்றுவீர்கள். காசோலை தரும்போது, வங்கி கையிருப்பை சரிபார்ப்பது நல்லது.
30.04.15 முதல் 01.08.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், எதிர்ப்பு கள் அடங்கும். பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலைக்கான முயற்சி பலன் தரும்.
உங்கள் பாதகாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். புறநகரில் வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை... சனி அனுஷத்திலேயே வக்ரம் ஆவதால், அக்கம் பக்கத்தாருடன் அனுசரித்து செல்லவும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் தனபூர்வ புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள்.எதிர்பார்த்த தொகை வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். பூர்வீகச் சொத்தை
புதுப்பிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டையிலேயே சனி வக்ரமாகி செல்கிறார். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் உண்டு.பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். புது பதவிகள் தேடி வரும்.
சனி ராசியைப் பார்க்கிறார். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். மறதி, பித்த மயக்கம் வந்து நீங்கும். சனி 4ம் வீட்டைப் பார்ப்பதால், அபராதம் செலுத்தும் சூழல் ஏற்படலாம்; வாகன லைசென்ஸ் விஷயத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சனி 9ம் வீட்டைப் பார்ப்ப தால் அதீத செலவுகள் இருக்கும்.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. கடனுதவியும் கிடைக்கும். புரோக்கரேஜ், கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் உண்டாகும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும்.
உத்தியோகத்தில், சிலர் உங்கள் ஐடியாக்களை தனதாக்கிக் கொள் வார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவார்கள். திருமணம் தாமதமாகி முடியும். மாணவர்கள், பாடங்களில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, அலைச்சலையும் தாமதத்தையும் தந்தாலும், கடின உழைப்பால் உங்களை முன்னேறவைக்கும்.
பரிகாரம்: உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் திருவிடைமருதூர் சென்று ஸ்ரீமகாலிங்கேஸ்வரருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.

மாதானத்தை விரும்பும் மிதுன ராசிக்காரர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை, 6ல் அமர்ந்து பல இன்ப அதிர்ச்சிகளை அள்ளித் தரவுள்ளார், சனிபகவான்.
சிந்தனை சிறப்புறும். முக மலர்ச் சியுடன் திகழ்வீர்கள். பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்றுசேர்வர்.அழகு, ஆரோக்கியம் கூடும்.மாறுபட்ட  அணுகுமுறைகளால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதுவரை ஏமாற்றி வந்த உறவுகளும், நட்பு வட்டாரமும் வலியவந்து மன்னிப்பு வேண்டுவர்.
பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டைவிட்டு சனி விலகுவதால், குழந்தை பாக்கியம் ஸித்திக்கும்.பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவீர்கள். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளுக்கு அழகான மணமகன் அமைவார். மகனுக்கு நல்ல வேலை அமையும். அதிகவட்டிக் கடனை பைசல் செய்ய வழி வகை பிறக்கும்.  
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்களின் சப்தம ஜீவனாதிபதியான குருவின் சாரத்தில், விசாகம் 4ம் பாதம், 6ம் வீட்டில் சனி செல்வதால் திடீர் இழப்புகள், இனம்புரியாத பயம், பண விரயம், மனைவிக்கு முதுகு, மூட்டு வலி, சிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.
14.6.15 முதல் 5.9.15 வரை சனி உங்கள் ராசிக்கு 5ம் வீடான துலாம் ராசியில், விசாகம் 3ம் பாதத்தில் செல்வதால், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகி முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். கர்ப்பிணிகள் உணவில் கட்டுப்பாடைக் கடைப்பிடிக்குவும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தடைப்பட்ட காரியங்களெல்லாம் நிறைவேறும். உங்களின் அஷ்டமபாக்யாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும்.  
15.3.15 முதல் 29.04.15 வரை; 19.5.16 முதல் 12.08.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், திட்டமிடாத பணிகளில் ஈடுபடாதீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் ராசியாதிபதியும், சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வ தால் எதிர்ப்புகள் குறையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாய்வழிச் சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.    
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் வேலைச் சுமை, உறவினர் பகை, சிறு விபத்துகள் வந்து நீங்கும். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களை சரி பார்க்கவும்.  
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால், தைரியம் கூடும். புதுப் பதவி தேடி வரும். எனினும் ஒருவித மன இறுக்கம் ஏற்படும். சனி 8ம் வீட்டைப் பார்ப்பதால் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் சட்ட நிபுணர் களை ஆலோசிப்பது நல்லது. சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள்.
வியாபாரத்தில், புதிய சரக்குகளை் கொள்முதல் செய்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டு, விரும்பிய இடமாற்றம், சம்பளம்பதவி உயர்வு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.    
கன்னிப்பெண்களுக்கு வேற்று மாநிலம் அல்லது அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பு, போட்டிகளில் வெற்றி உண்டு!
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி சவாலான காரியங்களையும் எளிதாக முடிக்கவைப்பதுடன், அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்று ஸ்ரீபெருமாளை வழிபட்டு வாருங்கள். ஏழை மாணவியின் கல்விக்கு உதவுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.