கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 5 மார்ச், 2017

கடிதம்

  1. அனுப்புனர், பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.
  2. யாருக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது என்பதைப் பொருத்து எப்படி அழைப்பது என்று முடிவு செய்து எழுத வேண்டும்.
  3. தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரசு அதிகாரி என்றால் மதிப்பிற்குரிய ஐயா எனஅழைக்க வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் அன்புள்ள என அழைக்க வேண்டும். வேறு வெளியாட்களாக இருப்பின் அன்புடையீர் என அழைக்க வேண்டும்.
  4. கடிதத்தின் பொருள் என்ன என்பதை எழுத வேண்டும்உள்ளடக்கம் - நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ, அதை சுருக்கமாக எழுதிட வேண்டும்.
  5. இறுதியில் ஊர், நாள் ஆகியவற்றை கடிதத்தின் வலது மூலையில்எ ழுதிட வேண்டும்.
  6. இடது மூலையில் யாருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்பதைப்பொறுத்து தங்களின் பணிவான, அன்பான, உண்மையான என்று எழுதிட வேண்டும்.
  7. தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரசு அதிகாரி என்றால் தங்களின் பணிவான என நிறைவு செய்திட வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் தங்களின் அன்பான என முடித்திட வேண்டும். வேறு வெளியாட்களாக இருப்பின் தங்களின் உண்மையான என நிறைவு செய்திட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.