கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 14 டிசம்பர், 2009

சிற்றுண்டிவகைகள்-1

கரட்மசாலாகோன்


தேவையானவை 


கரட் - தேவையானளவு 
உருளைக்கிழங்கு(அவித்த,தோலுரித்த) - தேவையானளவு 
வெங்காயம் - தேவையானளவு 
மஞ்சள்தூள் - சிறிதளவு 
கடுகு - சிறிதளவு 
பச்சை மிளகாய் - தேவையானளவு 
எண்ணெய் - தேவையானளவு 
கருவப்பிள்ளை - தேவையானளவு 
மிளகாய்த்தூள் - சிறிதளவு (விரும்பினாள்) 
உப்பு -தேவையானளவு 
உளுத்தம்பருப்பு -சிறிதளவு
 பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு

செயல்முறை 


(அ) கரட்டின் தோலை சீவி வைக்கவும் 

(ஆ)அதன் பின்பு கரட்டின் உள்ளே
       ஒரு விரல் போகும் அளவிற்கு
        குடைந்து எடுக்கவும்.

 (இ)குடைந்தெடுத்த கரட்டை
        சிறிதளவு வேகவிட்டு எடுக்கவும்.

 (ஈ)ஒரு பாத்திரத்தில் வேக வைத்த
       உருளைக் கிழங்கினை போட்டு
       நன்றாக மசிக்கவும்.

 (உ) மசித்த உருளைக்கிழங்குடன்
         மஞ்சள்தூள் உப்பு மிளகாய்த்தூள்
        சேர்த்து பிசையவும்.

 (ஊ)அடுப்பில் தாட்சியை (வாணலியை)
         வைத்து சூடாக்கி அதில் சிறிதளவு
         எண்ணைய் விட்டு சூடாக்கவும்.

 (எ)சூடாக்கிய எண்ணையில் சிறிதளவு
      கடுகு பெருஞ்சீரகம் வெங்காயம்
      பச்சைமிளகாய் உளுத்தம்பருப்பு
     ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

( ஏ)பின்பு தாளித்தவற்றுடன் உப்பு
     மஞ்சள்தூள்,மிளகாய்த் தூள் சேர்த்து
     மசித்த உருளைகிழங்கை போட்டு
     நன்றாக வதக்கவும். 

(ஜ) வதக்கியபின்பு அடுப்பிலிருந்து
      தாட்சியல்(வாணலியை) இறக்கி
     ஆறவிடவும்.

(ஒ) வதக்கியவை ஆறிய பின்பு
       குடைந்தெடுத்து ஓரளவு
       அவித்த கரட்டின் உள்ளே
       ஸ்டவ் செய்யவும்.

 (ஓ) ஸ்டவ் செய்த கரட்டை
         அவனில் 160 டிகிரியில் 3
         நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.

(ஔ) இப்போது சுவையான
          கிரிஸ்பியான கரட் மசால
          கோன் தயாராகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.