வெள்ளி, 1 ஜனவரி, 2010
சங்கீதம்-3
சுருதி
சுருதிக்குரிய இன்னொரு
பெயர் கேள்வி ஆகும்.
சுருதியை ஆரம்பநாதம்எனவும் அழைப்பார்கள்
இசைஆரம்பிப்பதிற்கு சுருதி மிக மிக இன்றி
அமையாதது ஆகும். இதனாலேயே சுருதியை
மாதா,லயத்தை பிதா என சுலோகங்கள்
கூறுகின்றன மாதா என்பது தாயை குறிக்கும் ஒரு
சொல்லாகும் அத்துடன் பிதா என்பது தந்தையை
குறிக்கும் சொல்லாகும். சுலோகத்தில் சுருதி தாய்
ஆகவும் லயம் தந்தையாகவும் இருந்தால் தான்
இசை என்ற குழந்தையை பெறலாம் ஆனால் இதில்
ஏதாவது ஒன்று இல்லாமல் போனால் உண்மையான
இசை பிறக்காது அத்துடன் சாமவேதத்தில் சுருதியை
ஏகம்,அநேகம் ,வியாபகம் என கூறப்பட்டுள்ளது.
ஆரம்பநாதமாகிய சுருதி இசைபாடுவதிற்குரிய நாதக்
கோடாக அமைந்துள்ளது எனலாம் அத்துடன் இசை
பயிற்சியை செய்ய விரும்புபவர்கள் இசைபயிற்சிக்
உரிய அப்பியாசங்களை ஆரம்பத்தில் இருந்து செய்து
பழக வேண்டும் என்பது விதிமுறையாகும் சுருதியுடன்
இணையாத இசை ஒரு போதும் சோபிதம் அடையாது
ஆகவே தான் சுருதிக்காக தம்புரா,ஒத்து,சுருதிப்பெட்டி
என பல கருவிகள் உருவாகியுள்ளன பெரும்பாலும்
சுருதிக்காக தம்புராவையே உபயோகித்து வருகின்றனர்
அத்துடன் சுருதியானது இரண்டு வகைப்படும்.
அவையாவன
(1 ) பஞ்சமசுருதி
(2 ) மத்திம சுருதி
பஞ்சம சுருதியானது - ஸா - பா - ஸா ஆகும்.
மத்திம சுருதியானது - ஸா - மா - ஸா ஆகும்.
Labels:
சங்கீதகல்வி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.