கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 1 ஜனவரி, 2010

தோசை வகைகள்-2

பஞ்சகல்யாணி தோசை ஜவகைபருப்புகளை பஞ்சகல்யாணி என
அழைக்கப்படும் ஆகவே ஜவகையான பருப்புகளை சேர்த்து செய்த இந்த தோசை பஞ்சகல்யானி தோசைஆகும் இந்த தோசை மிகமிக சுவையானதும் காபோவைதரேற்று, கொழுப்பு,விற்றமின்,மினரல்,புரதம் போன்ற பல சத்துகளை உடையதும்,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ண கூடியதும் ஆகும் ஆகவே இந்த தோசையின் சுவையை நீங்கள் அறிய விரும்பினால் இதனை செய்து சாப்பிட்டு இதன் சுவையை அறியவும்.
தேவையான பொருட்கள் உளுந்து - 4 மேசைகரண்டி மைசூர்பருப்பு - 4 மேசைகரண்டி கடலைபருப்பு - 4 மேசைகரண்டி துவரம்பருப்பு - 4 மேசைகரண்டி பயறு - 4 மேசைகரண்டி கோதுமை மா (மைதாமா) - 2 சுண்டு அரிசி - சிறிதளவு வெந்தயம் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையானளவு தண்ணீர் - தேவையானளவு மஞ்சள் தூள் -சிறிதளவு சிறிதாக வெட்டிய செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 4 கடுகு - சிறிதளவு பெருஞ்சீரகம் (சோம்பு) - சிறிதளவு கருவப்பிலை( நறுக்கியது)- சிறிதளவு நல்லெண்ணைய் - தேவையானளவு முட்டை - 1(விரும்பினாள்) உருளைக்கிழங்கு(சிறியது) - 1(விரும்பினாள்) வெங்காயம் (பெரிது ,நறுக்கியது) - 1 ஒரளவு கொதித்த தண்ணீர் - தேவையானளவு

செய்கைமுறை

(1 )ஒருபாத்திரத்தில் எல்லா வகையான பருப்புகள் ,ஓரளவு கொதிதண்ணீர் ஆகியவற்றை போட்டு அரைமணித்தியாலம் ஊறவிடவும் .

(2 ) இன்னொரு பாத்திரத்தில் வெந்தயம்,அரிசி,ஒரளவு கொதிதண்ணீர் ஆகியவற்றறை போட்டு 1/2 மணித்தியாலம் ஊறவிடவும்.

(3 )அரை மணித்தியாலத்தின் பின்பு கிரைண்டரில் (மிக்ஸியில்) வெந்தயம் ,அரிசி சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்து அதனை ஒரு பாத்திரத்தில் போடவும் . (4 )அதன் பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சேர்த்து ஊற வைத்த எல்லாவகையான பருப்புகள் ,தண்ணீர் ஆகியவற்றை போட்டு பொங்க பொங்க அரைக்கவும் (தோசைமாபதத்திற்கு). (5 ) பின்பு அரைத்தவற்றை எடுத்து அரிசி,வெந்தயம் ஆகியவை அரைத்து வைத்துள்ள பாத்திரத்தில் போடவும். (6 )அதன் பின்பு கோதுமைமா(மைதாமா),தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு கட்டியில்லாமல் நன்றாக கலந்து அரைக்கவும் . (7 ) கலந்து அரைத்த பின்பு இதனை அரிசி,வெந்தயம்,பருப்பு வகைகள் ஆகியவற்றை அரைத்து எடுத்து வைத்து உள்ள பாத்திரத்தில் கட்டியில்லாமல் அரைத்த கோதுமைமா (மைதாமா),மஞ்சள்தூள் ஆகியவற்றையும் போட்டு நன்றாக கலந்து புளிக்க வைக்கவும் . (8 ) அடுத்தநாள் புளித்த தோசைக் கலவைக்கு உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.(விரும்பினால் கோதை அகற்றிய ஒரு முட்டையை தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும்). (9 ) அதன் பின்பு ஒரு துணியை பொட்டலமாக கட்டி வைக்கவும் அல்லது ஒரு உருளைக் கிழங்கினை இரண்டு சம பாதியாக வெட்டி அதில் ஒரு பாதியை எடுத்து அதன் தோல் பகுதியில் முள்ளுக்கரண்டியால் குத்தி மாட்டவும் . (10 )பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நல்லெண்ணையை ஊற்றிஅதில் ஏற்கனவே கட்டிய துணி பொட்டனத்தை அல்லது முள்ளுகரண்டியில் குத்தி வைத்திருக்கும் உருளைக்கிழங்கினை (எண்ணையில் படும்படி) அதில் ஊறவைக்கவும். (11 )அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு எண்ணையை விட்டு சூடாக்கி அதில் கடுகைபோட்டு வெடிக்கவிட்ட பின்பு நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஓரளவு பொரியவிட்ட பின் .செத்தல் மிளகாய், பெருஞ்சீரகம்,நறுக்கிய கருவப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். (12 )இவை யாவும் தாளித்த பின்பு தாளித்தவற்றை தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும். (13 )பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் பூசிய துணி போட்டனத்தால் அல்லதுமுள்ளுகரண்டியில் குத்தப்பட்டு நல்லெண்ணய் பூசப்பட்டஉருளைக்கிழங்கினால் நன்றாக தோசைக்கல்லில் தடவும். (14 ) தடவிய பின்பு ஏற்கனவே கலந்து வைத்துள்ள தோசை மாவில் ஒரு குழிக்கரண்டியில் எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கிய தோசைக்கல்லில் தோசை வடிவில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய மாவை)பின்பு அதை வேகவிடவும். (15 )ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி போட்டு மற்ற பக்கமும் வேகவிடவும். (16 )இரண்டு பக்கமும் நன்றாக வெந்தபின்பு சுவையான சத்தான செய்வதிற்கு இலகுவான தோசை தயாராகிவிடும் அதன் பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.(இதனைப்போல மற்றைய தோசைகளையும் சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில் வைக்கவும்). (17 )பின்பு ஒரு தட்டில் தேவையானளவு தோசைகளை வைத்து அதனுடன் சம்பல் சாம்பார் சட்னி அல்லது எதாவது பிரட்டல்கறி ஆகியவற்றில் ஒன்றினை வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை - ஏதாவது பருப்பு வகைகளில்அலர்ஜி உடையவர்கள் அந்த பருப்பினை தவிர்த்து விட்டு மற்றைய பருப்பு வகையில் சிறிதளவு கூடுதலாக போட்டு தோசையை செய்யவும் அல்லது வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் - தோசை குளிர்மையானது ,தோசை மாவில் முட்டையை போட்டு கலந்து தோசையை சுட்டால் தோசை கல்லில்அல்லது வாணலியில் இருந்து இலகுவாக கழற்றி எடுக்கலாம்

மாற்று முறை - விரும்பிய அரிசிவகைகளை பாவிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.