கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 8 ஜனவரி, 2010

பயனுள்ள சமையல் குறிப்புக்கள்-5

(1) கிரேவி, குருமா, குழம்பு (கூட்டு) போன்றவை
சமைக்கும் போது சில நேரங்களில் இவை
கெட்டியாகி (தடிப்பாகி) விடும். தடிப்பான
கிரேவி,குருமா,குழம்பு(கூட்டு) போன்றவைக்கு
தேவையானளவு தக்காளிப்பழத்தை அரைத்து
இவற்றுடன் சேர்த்தால் கிரேவி,குருமா,குழம்பு
(கூட்டு) போன்றவை சுவையாகவும் சரியான
பதத்திலும் காணப்படுவதுடன் இதற்கு எண்ணெய்
சேர்க்கவும் தேவையில்லை .

(2 ) நாங்கள் கடையில் வாங்கிய பீட்ரூட்,கரட்
சௌசௌ போன்ற காய்கறிகள் சில
நேரங்களில் கொழாகொழாவெனவாகி
விடும்.இப்படியாக மாறிவிட்ட காய்கறிகளை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில்
இவற்றை போட்டு இப்பாத்திரத்தை மூடாமல்
பிரிட்ஜில் வைத்தால் அடுத்தநாள் இக்காய்
கறிகள் நல்ல பிரஸ்ஸாகி விடும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.