இறால் கறி
தேவையானபொருட்கள்
சுத்தமாக்கிய இறால் - 500 கிராம்
நறுக்கிய உள்ளி (பூண்டு ) -தேவையானளவு
நறுக்கிய வெங்காயம்-தேவையானளவு
நறுக்கிய இஞ்சி -மிக சிறியதுண்டு
பெருஞ்சீரகம் (சேம்பு) -சிறிதளவு
கடுகு -சிறிதளவு
எண்ணெய் -சிறிதளவு
மிளகாய்த்தூள் -தேவையானளவு
உப்பு -தேவையானளவு
கருவப்பிலை -சிறிதளவு (விரும்பினாள்)
பழப்புளி -தேவையானளவு
பால் -தேவையானளவு
செய்முறை
(1)அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து சூடாக்கி அதில் எண்ணையை
விட்டு சுடாக்கவும்.
(2 )எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய உள்ளி(பூண்டு),சுத்தமாக்கிய இறால்,உப்பு ஆகியவற்றை போட்டு ஓரளவு பொரிக்கவும்.
(3 )இறால் ஓரளவு பொரிந்த பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொரிக்கவும் .
(4 )இவை யாவும் ஓரளவு பொரிந்த பின்பு இதனுடன் கடுகு ,பெருஞ்சீரகம்(சேம்பு ) கருவப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
(5 )பின்பு இவற்றுடன் நறுக்கிய இஞ்சியை போட்டு கலக்கி பொரிய விடவும் .
(6 ) இவை யாவும் பொரிந்த பின்பு இதனுடன் மிளகாய்த்தூளை போட்டு பிரட்டி சிறிது நேரம் மூடி அவியவிடவும் .
(7 )அதன் பின்பு இதனுடன் பழப்புளியை விட்டு கலந்து சிறிது நேரம் வேகவிடவும்.
(8 )இவை யாவும் வெந்த பின்பு இதனுடன் தேவையானளவு பசுப்பால் அல்லது தேங்காய்ப்பால் ,சிறிதளவு தண்ணீர் சிறிதளவு உப்பு ஆகியவற்றை விட்டு கலந்து நன்றாக கொதிக்கவிடவும்
(9 )கொதித்து சிறிதளவு தடிப்பான பின்பு சத்தான சுவையான இறால் குழம்பு (கூட்டு ) தயாராகிவிடும் .
(10 )தயாரான பின்பு ஒரு தட்டில் சோறு (சாதம் ),இட்லி ,பிட்டு ,இடியப்பம்,பாண் ஆகியவற்றில் விரும்பிய ஏதாவது ஒன்றை வைத்து அதனுடன் சுவையான சத்தான செய்வதிற்கு இலகுவான இறால் கறியை வைத்து பரிமாறலாம்.
குறிப்பு
(அ )விரும்பினாள் இறாலின் தலையை அகற்றிய பின்பு சிறிய கீறுகீறி அதிலிருக்கும் மண்ணை அகற்றிய பின்பு தோலுடன் சமைக்கலாம்
(ஆ )தேங்காய் பாலுக்கு பதிலாக பசுப்பலை விட்டு சமைக்கலாம் .
(இ)சிறிதளவு கரம்மசாலாத்தூளை சேர்த்து சமைக்கலாம் .
(ஈ )விரும்பினால் ஒரு சிறிய தக்காளிப் பழத்தை சேர்த்து சமைக்கலாம்
எச்சரிக்கை
இறால் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்
சமைக்கும் நேரம்
(20 -30 )நிமிடங்கள்
ஆயத்த நேரம்
(10 -20 )நிமிடங்கள்
பரிமாறும் அளவு
(2 -4 )நபர்கள்
சனி, 9 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.