கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 22 ஜனவரி, 2010

பூனையும் நரியும் -2

பூனையும் நரியும்-2

தொடர்ச்சி

இப்படியே பூனையின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.ஆனால் ஒருநாள் பூனை வழமையை போல உணவை தேடி கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த பெண் நரி ஒன்று உணவு தேடிக்கொண்டிருந்த பூனையை கண்டது .அந்த நரி ஒரு நாளும் பூனையை கண்டதில்லை ஆகவே இந்த பூனையை பார்த்து பயந்து விட்டது .அதன் பின் தனது மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு பூனையிடம் நீங்கள் யார்? நான் உங்களை போன்ற மிருக இனங்களை நான் ஒரு நாளும் இங்கு பார்த்ததேயில்லை அத்துடன் நீங்கள் எங்கு இருந்து வருகின்றீகள் ? எனக் கேட்டது அதற்கு பூனை எனது பெயர் சிங்கன் அத்துடன் நான் சிங்கராஜாவின் தளபதி.உனக்கு என்னை பற்றி யாரும் கூறவில்லையா? நான் சிங்கராஜாவின் உத்தரவின்படி இந்த காட்டை ஆட்சி செய்ய வந்திருக்கின்றேன் என்றது . தொடரும் --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.