முருங்கைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் (தோல்சீவிய)-தேவையானளவு
பசுப்பால் /தேங்காய்பால் -தேவையானளவு
கருவப்பிலை -சிறிதளவு
உள்ளி(பூண்டு)(வெட்டியது)-சிறிதளவு
மிளகாய்த்தூள்-தேவையானளவு
பழப்புளி-சிறிதளவு
உப்பு -தேவையானளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
வெங்காயம்(சிறிதாக வெட்டியது) -1 /2பாதி
பச்சைமிளகாய்(சிறிதாகவெட்டியது)-(1 -2 )
கடுகு -அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு)-அரைதேக்கரண்டி
எண்ணெய்-சிறிதளவு
செய்முறை
அடுப்பில் வாணலியை(தாட்சியை)வைத்து
அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு
சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
கடுகை போட்டு வெடிக்கவிடவும்.
கடுகு வெடித்த பின்பு அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு),கருவப்பிலை,உள்ளி(பூண்டு),
பச்சைமிளகாய்,வெங்காயம் ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும் .
தாளித்த பின்பு அதனுடன் வெட்டி சுத்தம்
செய்து துண்டுகளாக்கிய முருங்கைக்
காய்களை போட்டு நன்றாக கலந்து ஓரளவு
பொரிக்கவும் .
இவையாவும் தேவையானளவு பொரிந்ததும்
அதனுடன் மிளகாய்த்தூளை போட்டு கலந்து
மிளகாய்த்தூளின் பச்சவாசனை போகும்வரை
பொரிய விடவும் .
அதன் பின்பு அதனுடன் பழப்புளி, தண்ணீர் ,உப்பு
ஆகியவற்றை கலந்து கொதிக்கவிடவும்.
குழம்பு ஓரளவு கொதித்த பின்பு அதனுடன் பாலை
கலந்து நன்றாக கொதிக்கவிடவும் .
இவையாவும் நன்றாக கொதித்த பின்பு அடுப்பிலிருந்து
தாட்சியை(வாணலியை)இறக்கிவைக்கவும்.
இப்போது சுவையான சுத்தமான செய்வதிற்கு இலகுவான
சத்தான முருங்கைக் காய் குழம்பு தயாராகி விட்டது.
அதன் பின்பு ஒருதட்டில் சோற்றினை(சாதத்தை) ,
புட்டினை,இடியப்பத்தை,பரோட்டாவை,
ரொட்டியை,சப்பாத்தியை,தோசையை,இட்லியை,
வைத்து அதனுடன் இக்குழம்பை விட்டு பரிமாறவும்.
திங்கள், 1 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.