கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 4 மார்ச், 2010

நன்னெறி

(3)
உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங் காத்துக்
கொள்ளுங் குணமே குணமென்க-வெள்ளந்
தடுத்தவரிதோ? தடங்கரைதான் பேர்த்து
விடுத்தவரிதோ? விளம்பு .

பதவுரை

உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் -
மனத்தைத் தன்வயத்த தாக்கிக் கொண்டு
எழுந்து வளர்கின்ற கோபத்தை காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க-அடக்கிக்
கொள்ளுகின்ற குணமே அருமையாகிய
குணம் என்று அறியக் கடவாய் .வெள்ளம்
தடுத்தல் அரிதோ -(பெருகி வருகின்ற )
வெள்ளத்தை(க் கரைகட்டி )த் தடுத்தல்
அரியதோ .தடம் கரை சேர்த்து விடுத்தல் 
அரிதோ -முன் கட்டப்பட்டிருந்த பெரிய
கரையை உடைத்து (அதனுள் அடங்கி
இருந்த வெள்ளத்தை புறத்திலே செல்ல)
விடுத்தல் அரியதோ .விளம்பு -நீ
சொல்வாயாக .தான் -அசை     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.