கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 4 மார்ச், 2010

தமிழ்த்தாய் வாழ்த்து



நீராரும் கடல்உடுத்த நிலமடந்தைக்கு எழில்ஒழுகும்
சீராரும் வதனம்எனத் திகழ்பரத கண்டம் இதில் 
தக்கசிறு பிறைநுதலும் திரித்தநறுந் திலகமுமே 
தெக்கணமும் அதில் சிறந்த திரவிடநல் திருநாடும் 
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பம்உற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்உயிரும்பலஉலகும்படைத்துஅளித்துடைக்கினும்ஓர் 
எல்லைஅறுபரம்பொருள்முன்இருந்தபடிஇருப்பதுபோல் 
கன்னடமும்களிதெலுங்குகவின்மலையாளமும்துளுவும்
உன்உதிர்த்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும் 
ஆரியம்போல்உலகவழக்கு அழிந்துஒழிந்து சிதையாஉன்
சீர்இளமைத்திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துமே !
                                    
                                மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.