கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 22 மே, 2010

விக்ருதி ஆண்டு ராசி பலன்

விருச்சிகம்
எதிரிக்கும் உதவும் நல்லெண்ணம் கொண்ட நீங்கள், போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என எதற்கும் அஞ்சாமல் சமூக அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள்.
உங்கள் சுகாதிபதி சனி பகவான் லாப வீட்டில் நிற்கும் போது விக்ருதி ஆண்டு பிறப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியாகும். 4ல் அமர்ந்து கொண்டு உங்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் குருபகவான், 2.5.10 முதல் 5ம் வீட்டில் அமர்வதால் உங்களின் நீண்டகால ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிரிந்திருந்த சொந்த பந்தங்களுடன் சேர்வீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். மகளின் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்றாற்போல நல்ல மணமகன் அமைவார். பல வருடங்களாக நடைபெற்று வரும் பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கோயிலை கட்டி கும்பாபிஷேகம் செய்து ஊர் மக்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 27.5.10 வரை நீசமாக இருப்பதால் சகோதரருடன் மனத்தாங்கல், சிறுசிறு ஏமாற்றங்கள், களைப்பு, சோர்வு, முதுகுவலி வந்து நீங்கும். வருடம் முழுக்க சனிபகவான் 11ம் வீட்டில் தொடர்வதால் திடீர் பணவரவால் பழைய கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வி.ஐ.பி.களின் துணையுடன் சில காரியங்களை சாதிப்பீர்கள். கணவன்&மனைவிக்குள் வீண் வாக்குவாதம், சந்தேகத்தால் சண்டை என்று வந்ததே, இனி சந்தோஷம் உண்டாகும். என்றாலும் ராகு&கேது சரியில்லாததால் உங்களுக்குள் உரசலை சிலர் ஏற்படுத்துவார்கள். அவர்களுக்கு இடமளிக்காதீர்கள். புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள். 14.4.10 முதல் 1.5.10 வரை மற்றும் 7.11.10 முதல் 20.11.10 வரை குரு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அந்த காலகட்டத்தில் கொஞ்சம் அலைச்சலும் தாயாருக்கு மருத்துவச் செலவுகளும் தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். சித்திரை மாதத்தில் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத பெரிய பதவிகள், பிரபலங்களின் நட்பு, நாடாளுபவர்களால் பலன் அடைதல், வாகனம் வாங்குதல் ஆகியன நிகழும். ஆவணி, தை மாதங்களில் திருமணம் கூடிவரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாடு சென்று வர ஏற்பாடாகும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். பங்காளிப் பிரச்னை தீரும். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிடைக்கும். 1.9.10 முதல் 31.12.10 வரை சுக்கிரன் 12ம் வீட்டில் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். கன்னிப்பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்னைகளால் நிலைகுலைந்து போனீர்களே! இனி நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். ஆவணி, கார்த்திகை மாதங்களில் கல்யாணம் நடக்கும். மாணவர்களே! படிப்பின் மீதிருந்த வெறுப்பு நீங்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று பெற்றோரை தலைநிமிரச் செய்வீர்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். வியாபாரிகளே! தொட்டதெல்லாம் துலங்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். மரவகைகள், ஷேர், ரியல் எஸ்டேட், பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்ஸி, டிராவல்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட இடர்பாடுகளை சரி செய்வீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். சித்திரை, ஆவணி, தை மாதங்களில் எதிர்பாராத லாபமுண்டு. பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகஸ்தர்களே! எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் ஒரு அடிமைபோல் வேலை பார்த்தீர்களே! உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித் தள்ளினாரே, இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். ஆவணி, புரட்டாசி, தை மாதங்களில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். கலைஞர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். அரசியல்வாதிகளே! வெற்றிக் கனியைச் சுவைப்பீர்கள். விவசாயிகளே, நிலத்தகராறு, நீர் பற்றாக்குறை என்று தொடர் சிக்கல்களை சந்தித்தீர்களே, இனி மகசூல் இரட்டிப்பாகும். இந்த விக்ருதி ஆண்டு வாடி வதங்கியிருந்த உங்களை மலர வைப்பதுடன், சொந்த பந்தங்கள் வியக்கும்படி வாழ வைக்கும். பரிகாரம்: பரணி நட்சத்திர நாளில், திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு நெய் விளக்கேற்றி வணங்குங்கள். சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுங்கள். செழிப்படைவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.