கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 22 மே, 2010

விக்ருதி ஆண்டு ராசி பலன்

தனுசு உலகம் ஒரு சந்தை மடம் என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் ஆசைப்பட மாட்டீர்கள். யாருக்காகவும் அஞ்சவும் மாட்டீர்கள்.
அதிர்ஷ்டத்தை நம்பாமல், உழைப்பால் உயர்வீர்கள்.உங்கள் ராசிக்கு சுக வீடான 4ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த விக்ருதி வருடம் பிறப்பதால் உங்களின் அணுகுமுறையை இனி மாற்றிக் கொள்வீர்கள். 5ம் வீட்டில் சுக்கிரனும், புதனும் வலுவடைந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணத்தட்டுப்பாடு குறையும். குடும்பத்தினரை கலந்தாலோசித்து எந்த முடிவையும் எடுங்கள். பிள்ளைகளை மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். 27.5.10 வரை உங்கள் பூர்வபுண்யாதிபதி செவ்வாய் 8ல் மறைந்து கிடப்பதால் சிறு விபத்து, சகோதரப் பகை, கல்யாணத்தடை என்று வந்து நீங்கும். மகளுக்கு பல இடங்களில் வரன் பார்த்து அலுத்துப் போனீர்களே! 28.5.10 முதல் உங்கள் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றாற்போல நல்ல வரன் அமையும். சகோதர, சகோதரிகளிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பொருளுதவி கிடைக்கும். 1.9.10 முதல் 31.12.10 முடிய உங்கள் லாபாதிபதி சுக்கிரன் லாப வீட்டிலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் மூத்த சகோதரர் உதவுவார். திடீர் பணவரவு உண்டு.
வருடம் பிறக்கும் போது ராசிக்கு 3ம் வீட்டில் மறைந்திருக்கும் உங்கள் ராசிநாதனான குருபகவான் 2.5.10 முதல் 4ம் வீட்டில் நுழைவதால் ஏமாற்றங்கள் விலகும். சலிப்பு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். என்றாலும் வீண் டென்ஷன், வேலைச்சுமை, ஒருவித பதற்றம், காரியத்தடை என்று இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் என வந்து நீங்கும். வீட்டில் இருக்கும் சமையலறை மற்றும் மின்சார சாதனங்கள் அடிக்கடி பழுதாகும். கழிவுநீர் குழாய் அடைப்பு, குடிநீர் பிரச்னை ஏற்படும். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய சித்திரை, வைகாசி மாதங்களில் வாய்ப்புகள் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனை போராடித் தீர்ப்பீர்கள். ராசிக்குள்ளேயே ராகு நிற்பதால் முன்கோபம் அதிகரிக்கும். ராசிக்கு 7ம் வீட்டில் கேது தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது சச்சரவுகள், சந்தேகங்கள் வரக்கூடும். எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்கூட்டியே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். அங்கீகாரமில்லாத சிட்பண்டுகளில் முதலீடு செய்ய வேண்டாம். வருடம் முழுக்க ராசிக்கு 10ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் உயரும். உறவினர்கள், நண்பர்களின் கல்யாண, கிரகப்பிரவேச வைபவங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். கன்னிப்பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். குண்டாகிவிடுவோமென நினைத்து குறைவாக சாப்பிடாதீர்கள். மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். வருட மையப்பகுதியில் புது வேலை கிடைக்கும். கல்யாணமும் நடக்கும். மாணவர்களே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். வியாபாரிகளே, கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை வைகாசி மாதத்தின் பிற்பகுதியில் விற்று முடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். மாசி மாதத்தில் பணவரவு அதிகரிப்பால் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிகல்ஸ், ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, கற்பூரம், ஊதுபத்தி வகைகளால் ஆதாயம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களே! நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும் மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். வேலைச்சுமை அதிகமாகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு நன்கு படித்துப் பாருங்கள். ஆவணி மாதத்தில் உங்கள் கை மேலோங்கும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. மாசி மாதத்தில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடிவரும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும். கலைஞர்களே, கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக இருந்தாலும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! வீண்பேச்சைத் தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். விவசாயிகளே, நவீனரக விதைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப் பாருங்கள். இந்த விக்ருதி வருடம் முதல் முயற்சியில் காரியங்களை முடிக்க முடியாமல் போனாலும் இடைவிடாத உழைப்பால் லட்சியத்தை எட்டிப் பிடிக்க முடியும். பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை சனிக்கிழமை அல்லது சித்திரை நட்சத்திர நாளில் தரிசியுங்கள். கணவனை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.