கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 5 மே, 2010

ஊறுகாய் வகைகள் - 1

கொய்யாக்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

கொய்யாக்காய்(அவித்தது) - 2
மிளகாய்த்தூள் - அரைத்தேக்கரண்டி 
எண்ணெய் - 4 தேக்கரண்டி 
லெமன் உப்பு - 1  தேக்கரண்டி
தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு - 2 தேக்கரண்டி 
உப்பு - தேவையானளவு 
கடுகு - சிறிதளவு 



செய்முறை



அவித்த கொய்யாக்காயை எடுத்துச்
அதில் உள்ள தண்ணீரை ஒரு
துணியால் துடைக்கவும்.


அதன் பின்பு அதனை விரும்பிய
அளவு சிறிய சிறிய துண்டுகளாக
வெட்டவும்.



வெட்டியபின்பு வெட்டிய துண்டுகளை 
ஒரு பாத்திரத்தில் போடவும் .



ஒரு பாத்திரத்தில் அவித்து வெட்டிய
கொயாக்காய் துண்டுகளை  போட்ட
பின்பு அதனுடன் மிளகாய்த்தூள்,லெமன்
உப்பு,தேசிக்காய் (எலுமிச்சம்பழ)சாறு,
உப்பு,கடுகு,எண்ணெய் ஆகியவற்றைப் 
போட்டு கரண்டியினால் நன்றாக 
கலக்கவும்.  



கலந்த பின்பு சுத்தமான சுவையான
கொய்யாக்காய் ஊறுகாய் தயாராகிவிடும் .


அதன்பின்பு ஒரு தட்டில் சோறு (சாதம்)
பாண்,பிட்டு, இடியப்பம் ஆகியவற்றில்
ஒன்றுடன் சேர்த்து பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.