கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 6 ஜூன், 2010

உலகக்கிண்ண கால்பந்துப் போட்டிகள்

தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக
இருக்கும் 19ஆவது உலகக்கிண்ண
கால்பந்துப் போட்டிகள் ஜூன் 11ம்
திகதி முதல் ஜூலை 11 ம் திகதி
வரை நடைபெறவுள்ளன. 1930 ம்
ஆண்டு முதன்முறையாக உலகக்
கிண்ண கால்பந்துப்போட்டிகள்
நடந்தது. அன்று முதல்4ஆண்டுக
ளுக்கு ஒருமுறை 18 உலகக்கிண்ண
போட்டிகள் இதுவரையில் நடை
பெற்றுள்ளன. இரண்டாம் உலகப்
போர் காரணமாக 1942, 1946 ஆண்டு
களில் இப்போட்டிகள் நடத்தப்பட
வில்லை. போட்டிகளில் மொத்தம்
32 அணிகள் பங்கேற்கும். போட்டியை
நடத்தும் நாடு தவிர மற்ற 31 அணிகள்
தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம்
உலகக் கிண்ண கால் பந்து இறுதிப்
போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டிகள்
தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடைபெறும். 4
ஆவது ஆண்டு முடிவில் போட்டிக்கு தகுதி
பெற்ற அணிகள் உலகக்கிண்ண போட்டியி
ல் விளையாடும். இதுவரை நடந்த 18 போட்டி
களில் 7 நாடுகள்தான் திரும்பத்திரும்ப பீபா
கிண்ணத்தைவென்றுள்ளன. கால்பந்தின்
தொட்டில் என்று அழைக்கப்படும் பிரேசில்
அதிகபட்சமாக 5 முறை சம்பியனாகியுள்ளது.
நடப்புச் சாம்பியனான இத்தாலி 4 முறையை
சம்பியனாகவும், அதற்கு அடுத்த இடத்தில்
ஜேர்மனி 3 முறை சம்பியான் பட்டத்தையும்
வென்றுள்ளது. உருகுவே, ஆர்ஜென்டினா
அணிகள் தலா 2 முறையும், இங்கிலாந்து,
பிரான்ஸ் அணிகள் தலா ஒரு முறையும்
பீபா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.
இதுவரை 76 நாடுகள் ஒவ்வொரு முறை
யேனும் உலகக் போட்டிகளில் பங்கேற்று
ள்ளன. 2006 இல் ஜேர்மனியில் நடந்த
உலகக்கிண்ண போட்டியை சுமார் 71.51
கோடி மக்கள் தொலைக்காட்சியிலும்,
நேரிலும் கண்டுகளித்துள்ளனர். 2010 க்கு
அடுத்தபடியாக 2014இல் பிரேசிலில்
போட்டி நடைபெறவுள்ளது. உலகிலுள்ள
விளையாட்டுக்களில் அதிகளவு மக்களால்
பார்க்கப்படும் பட்டியலில் முதலாவது
இடத்தில் பீபா உலகக்கிண்ண கால்பந்து
போட்டிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.