கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 10 ஜூன், 2010

யாழ்ப்பாணம் - 6

தென்னிந்தியாவின் தொண்டை நாட்டுக் 
குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் 
இடம்பெற்றுள்ளன என்பதற்கு சான்றுகள் 
உள்ளன.கச்சி என்று சொல்லப்படுகின்ற 
தொண்டைநாட்டுப் பெயரோடு கச்சினா
வடலி சுன்ணாகத்திலும், காரைக்கால் 
என்ற பெயரோடு காரைதீவு, காரைக்காடு, 
காரைக்கால் என்று இணுவில் பகுதியிலும், 
உடுப்பூர் என்ற பெயரோடு உடுப்பிட்டி என்றும், 
காஞ்சி என்ற பெயரோடு காஞ்சிக்கோட்டம் 
என்றும், சோழிங்கன் என்ற பெயரோடு 
சோழங்கன் என்றும், தொண்டை என்ற 
பெயரோடு தொண்டைமானாறு, தொண்டைமான்
தோட்டம் என்றும் மயிலம் என்ற பெயரோடு 
மயிலம்காடு என்றும் தொண்டைநாட்டுக் 
குடியேற்றங்கள் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டுள்ளன.
பொலிகண்டி என்ற சோழநாட்டுக் குடியேற்றமும், 
 ஆவுடையார்பொக்கட்டி, கோட்டைக்காடு, குடத்தனை
, குமாரசிட்டி, கோவிலாக்கண்டி, கோவிற்கடவை, 
தாளையடி, தில்லையடி, தோப்பூர், நயினாதீவு, 
நார்த்தாவளை, நாவற்குழி, நல்லூர், வயலூர், 
கோம்பையன்திடல் போன்ற பகுதிகளில் 
சோழக்குடியேற்றங்கள் காணப்படுகின்றன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.