கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 10 ஜூன், 2010

ஸ்ரீ - லங்கா வரலாறு

பழந்தமிழ் வழக்கில் குறுநிலப் பகுதிகளான 
நாட்டுப் பிரிவுகளிலே தலைமை அதிகாரங்களைப் 
 பெற்றிருந்தவர்களைக் கோ என்று குறிப்பிடுவது 
வழக்கம். அவ்வண்ணமாக கி.மு. 2ஆம் 
 நூற்றாண்டிலும் ஆனைக்கோட்டை பகுதியிலே 
கோ என வழங்கிய தலைவர் இருந்திருக்கலாம் என 
 கருதலாம்.அகித்தி ஜாதகம் அதே காலமளவில் 
ஆட்சி புரிந்த ஒரு சிற்றரசைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. 
கந்தரோடையிற் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில்
 தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறித்த சில அரிய 
காசுகள் கிடைத்துள்ளன.அவற்றிலும் நாக பொலம் 
என்ற வாசகம் ஒரு நாணத்திற் காணப்படுகின்றது. 
நாக அரசன் வழங்கிய காசு என்று அதனை விளக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.