யாழ்ப்பாண குடியேற்றங்கள்
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் முதன்
முதலில் குடியேறியவர்கள் சேரநாட்டில் இருந்து
வந்த மலையாளிகள் என்பது வரலாற்று
அறிஞர்களின் கருத்தாகும்.கேரள நாட்டை விட்டு வெளியேறிய மலையாளம் என்ற மொழியை
கதைக்கின்ற மக்கள் சிலர் 20 மைல் அகலமுடைய
பாலைக்காட்டு கணவாய் ஊடாக வந்து, வியாபாரப்
பாதையை அடைந்து, யாழ்ப்பாணம் சென்று அங்கு
குடியேறினார்கள்.சிலர் அதே கணவாய் ஊடாகச்
சென்று கொல்லிமலை, பச்சைமலை, ஜவ்வாது
மலைகளில் மறைமுகமாக குடியேறி வாழ்ந்தார்கள்.
வேறு சிலர் கடல் மார்க்கமாக கன்னியாகுமரி,
காயல்பட்டினம், இராமேஸ்வரம், மாந்தை
வழியாக வந்துயாழ்ப்பாணத்திலும், தென்
இலங்கையிலும் குடியேறினார்கள்.சிங்கள
அரசர்கள் தம் வசம் வைத்திருந்த மலையாளக்
கூலிப்படையைச் சேர்ந்த பலர் சம்பளம்
ஒழுங்காகக் கிடைக்காமை காரணமாகவும்,
இன்னும் பல காரணங்களுக்காகவும் படையை
விட்டு விலகி யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறினார்கள்.மலையாள தேசத்தில் நிலவிய
வேலைவாய்ப்பு இன்மையும் மலையாள
குடியேற்றத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.
மலையாளத்தில் உள்ள முக்கிய 27 சாதிகளில் 14
சாதிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளன என்பதை
போர்த்துக்கீசர்கள் எழுதிவைத்த தோம்புகளில் இருந்து
தெரிந்து கொள்ள முடியும்.மலையாளிகள் வந்து
குடியேறிய இடங்களுக்கு தங்கள் பெயரையோ,
தங்கள் ஊரின் பெயரையோ, தங்கள் சாதிப்பெயரையோ,
தங்கள் அரசன் பெயரையோ அல்லது தங்கள் நாட்டின்
பெயரையோ வைத்தார்கள்.
வியாழன், 10 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.