கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 10 ஜூன், 2010

லம்பகர்ணர் ஆட்சி

விஐயன் பிறப்பதற்கு முன்னரே இலங்கை ஒரு 
சிறந்த குடியேற்ற நாடாக விளங்கியது என்று
டொக்டர் போல் பீரிஸ் கூறியுள்ளார்.விஐயன் 
நகுலேஸ்வர ஆலயத்தை புதிப்பித்தான் என்றும், 
திருமூலர் இலங்கையை சிவபூமி என்று கூறியதாலும் 
மிகப்பழைய காலத்தில் தமிழர்கள் இங்கே 
குடியேறினார்கள் என்று கருதுவதற்கு இடமுண்டு.
அப்படியானால் அவர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து 

வந்தார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் 
தென்னிந்திய கீழைக்கரையோரங்களில் ஆதிக்கம் 
செலுத்திய  கள்ளர்கள் என்ற சாதியாகும்.கள்ளர்களின் 
காதுகளில் பாரமான காதணிகள் தூங்கியிருந்ததைக்கண்ட 
இலங்கையின் தென்பகுதி சிங்களவர்கள் அவர்களைப் 
பரிகாசமாக லம்பகர்ணர்கள் என்று அழைத்திருக்கிறார்கள்.
லம்பம் என்றால் தூங்கின்ற எனவும், கர்ணர் என்றால்

 காதுடையவர் எனவும் பொருள் கொள்ளமுடியும்.
லம்பகர்ணர்கள் இலங்கையின் வட பாகத்தை 200 
வருடங்கள் ஆட்சி செய்தார்கள்.கி.மு 1500 இல் ஆரியர்கள் 
இந்தியாவிற்குள் நுழைந்தபோது அவர்களை எதிர்த்துப்
 போர் புரிந்த நாகர்களையும், இயக்கர்களையும், 
திராவிடர்களையும் அவர்கள் பாம்புகள், பேய்கள், 
அசுரர்கள் என்று இழிவாகக் கூறினார்கள்.இதன் காரணமாக 
 இலங்கையில் குடியேறுவதற்கு பலருக்கு பயமாக இருந்தது.
விஐயனுடைய வருகைக்குப் பின்னர் பயம் ஓரளவுக்கு நீங்கியது.
சர்வதேச மக்களும் வியாபார நோக்கத்தோடு இங்கு வரத்

தொடங்கியதுடன் துறைமுகங்களும் முக்கியத்துவமடையத் 
 தொடங்கின.ஊர்காவற்துறை, சம்புகோவளம் என்னும் 
இரண்டு துறைமுகங்களும் வெளிநாட்டுக்கப்பல்கள் வந்து 
செல்லும் துறைமுகங்களாக விளங்கின.சேர நாட்டு வியாபாரிகள் 
பாலைக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருச்சி, 
பட்டுக்கோட்டை, புகார் முதலிய இடங்களுக்கு ஊடாக உள்ள 
வியாபார பாதை வழியாக வந்து இலங்கையின் வட பாகத்தில் 
பொருட்களை வாங்கிச்சென்றமையால் சேர நாட்டுக்கும் 
யாழ்ப்பாணத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.