கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 3 ஜூன், 2010

2010 உலகக் கிண்ணம்

உலகக் கிண்ண உதைபாந்தாட்டப் போட்டியை நடத்த 
ஏற்கனவே தென்னாபிரிக்கா தயாராகிவிட்டது.
அத்துடன் 2010ம் ஆண்டிற்கான இப்போட்டியில்
பங்குபற்றிவிளையாடுவதற்காக 32 நாடுகள்
ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுவிட்டன .
பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 224 நாடுகள்
உலக கிண்ணத் தகுதி காண் போட்டியில் பங்கு
பற்றியது அவற்றுள் பலம் வாய்ந்த நாடுகளான
அர்ஜென்டீனாவும்,பிரான்ஸும் வெற்றி பெற்று
உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத்
தகுதியைப் பெற்றனர்.இந்தப் போட்டியை தென் 
ஆபிரிக்கா நடத்துவதால் நேரடியாக விளையாடும் 
தகுதியை பெற்றது.உலகக்கிண்ண உதைபந்தாட்டப் 
போட்டியில் விளையாடுவதற்காக ஆபிரிக்க
கண்டத்தில் இருந்து 43 நாடுகள் தகுதி காண் போட்டியில் 
விளையாடின ஆனால் அவற்றுள் ஜந்து நாடுகள் மட்டுமே 
உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன 
அவையாவன - கானா,ஜவரிகோஸ்ட் ,கமரூன்,நைஜீரியா,
அல்ஜீரியா ஆகும். அத்துடன் உலகக் கிண்ண உதை
பந்தாட்டப் போட்டிகள் ஆனி(ஜூன்)11 ம் திகதி ஆரம்பமாகி
ஆடி(ஜூலை)மாதம் 11 ம் திகதி முடிவடைகிறது .

 தொடரும் -  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.