கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 10 ஜூன், 2010

ஸ்ரீ - லங்கா வரலாறு

அந்தச் சாசனத்தில் உள்ள பிராகிருதத்தில் தமிழ் செல்வாக்கு 
மிகுந்து காணப்படுவது கவனத்திற்குரியது. 13ஆம் நூற்றாண்டிலே 
தான் யாழ்ப்பாணத்தில் இராச்சியம் முதன் முதலாக 
அமைக்கப்பட்டதென்ற கருத்து நிலைபெற்று வந்துள்ளது.
ஆனாற் கந்தரோடை, மாந்தை, பூநகரி முதலான இடங்களிற்
 பெருமளவில் கிடைத்த நாணயங்கள் அதற்கு முற்பட்ட 
காலங்களில் வடபிராந்தியத்தில் அரச வம்சங்கள்
 வெவ்வேறு காலங்களில் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்தமைக்குச் 
சான்றுகளாக உள்ளன.கங்கவம்சமிசம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் 
வெளியிட்ட நாணயங்களும் காணப்படுகின்றன. அவற்றை 
மாதிரியாகக் கொண்டே ஆரியச் சக்கரவர்த்திகள் சேது 
நாணயங்களை வெளியிட்டார்கள்.மீன் வடிவங்களையும் 
நாணயங்களில் பொறித்தார்கள். அதுவும் மூன்று மீன் வடிவங்கள் 
பொறிக்கப்பட்ட நாணயங்கள் அங்கு பெருளவில் கிடைத்தன. 
அந்தப் பிரதேசங்களிலே வெவ்வேறு காலப் பகுதியில் அரசு 
புரிந்தவர்களால் அவை வெளியிடப்பட்டிருந்தல் வேண்டும்.
அந்த நாணயங்கள் தனித்துவமானவை. இவற்றைப் போன்ற 
காசுகள் தென்னிந்தியக் கரையோரங்களிலும் காணப்பட்டன. 
ஆதிகாலத்தில் வெளியிடப்பட்ட இலட்சுமி நாணயத்தில் 
சில வட இலங்கையில் வெளியிடப்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.