தனுசு ராசி
மதி யூகத்தால் அதிகா ரப்பதவியில் இருப்பவர் களையும் ஆட்டிப் படைக்கும் குணமும்,ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக ஓங்கிக் குரல் கொடுக்கும் தன்மையும் பெற்ற தனுசு ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 1, 3, 9 இந்த எண்களில், அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும். 1, 3, 9 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக்கிக்கொள்ள முடியும். மாணிக்க மோதிரம், கனகபுஷ்பராகம் மோதிரம் மற்றும் செவ்வாய் யந்திரம் பயன்படுத்தினால் பலன் கூடும். பலன்கள் : உடல் நலம் சீராக இருக்கும், மனக்குழப்பங்கள் நீங்கும், வீடு, சொத்து வாங்கும் முயற்சி வெற்றி யடையும், ஆபரண சேர்க்கை உண்டாகும், சகோதர்கள் வழியில் நன்மை கிடைக்கும், வீடு சம்பந்தபட்ட தொழி லில் முன்னேற்றம் காண்பீர்கள், குழந்தைகளின் உயர்கல்வியில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும், பாக்கியமாக எல்லாம் கிடைக்கும், குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை தீரும், தெய்வீக அனுகூலம் ஏற்படும், கடின உழைப்பால் புகழ் அடைவீர்கள், புதிய முயற்சிகளால் வீண் விரையங்களை தவிர்ப்பீர்கள், தகப்பனாரின் உடல் நலம் சீராகும், தந்தையின் ஆதரவு, பாசம் முழுமையாக கிடைக்கும், வாழ்க்கையில் அனைத்து வசதிகளும் பெற்று மன மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும், மனைவிக்கு ஆபரணம் வாங்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள், சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.