மகர ராசி
உள்ளம் அழுதாலும் உதட்டால் சிரிக்கும் மனம் பெற்ற, தன் சொந்த சோகங்களை வெளியில் சொல்லிக் கொள்ளாத மகர ராசி அன்பர் களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 3, 5, 6 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்த வொரு காரியம் செய்யும் பொழுதும், அது சாதகமாக முடியும். 3, 5, 6 ஆகிய எண்களின் இரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக்கிக்கொள்ள முடியும். குரு யந்திரம், புதன் யந்திரம் மற்றும் வைரம் (அ) வெள்ளை ஜிர்கான் மோதிரம் பயன்படுத்தினால் பலன் கூடும். பலன்கள் : உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள், பந்துக்களால் ஆதாயம் உண்டாகும், மூத்த சகோதரர்களால் நன்மை அடைவீர்கள், உறவினர்கள் சுமூகமாக நடந்து கொள்வார்கள், தைரியம் அதிகரிக்கும், குடும்பத்தில் ஏற்பட்ட மன கசப்பு நீங்கும், ஆன் மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை நீங்கும், தெய்வீக அனுகூலம் ஏற்படும், சோதனைகள் பலவற்றை எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள், எதிரிகளும் உங்களை விட்டு விலகி பிரிந்து போனவர்களும் இப்போது உங்கள் நட்பை நாடிவருவர்,மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும், தகப்பனாரின் உடல் நலம் சீராகும், தந்தையின் ஆதரவு, பாசம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும், பிள்ளைகளின் புத்திசாலித்தனத்தைக் கண்டு மகிழ்வீர்கள், வாழ்க்கையில் அனைத்து வசதிகளும் பெற்று மன மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள், தொழிலில் மேன்மை அடைவீர்கள், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், ஆபரணம் வாங்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.