கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 1 ஜனவரி, 2011

2011 ம் ஆண்டு வருடபலன் - கன்னிராசி


கன்னி ராசி
தன்னலமின்றி எப்போதும் பொது நலத்தையே நினைக்கும் மனம் பெற்ற, ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக சாதிக்கும் கன்னி ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 1, 5, 6 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும். 1, 5, 6 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக்கிக் கொள்ள முடியும். சூரிய யந்திரம், மரகதப்பச்சை மோதிரம் மற்றும் வைரம் (அ) வெள்ளை ஜிர்கான் மோதிரம் பயன்படுத்தினால் பலன் கூடும். பலன்கள் : உடல் நலம் சீராகும்,மனக்குழப் பங்கள் நீங்கி மனம் அமைதி பெறும், கற்பனை வளம் அதிகரிக்கும், எதிர்பாராத பண வரவு உண்டாகும்,குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும், தன வரவு தாராளமாக இருக்கும், காரிய முயற்சி களில் வெற்றி கிடைக்கும்,குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், பேச்சு திறமையால் முன்னேற்றம் உண்டாகும், கடின உழைப்பால் புகழ் அடைவீர்கள்,புதிய முயற்சிகளால் முன்னேற்றம் ஏற்படும்,தகப்பனாரின் உடல் நலம் சீராக இருக்கும், தந்தையின் ஆதரவு, பாசம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்,பிள்ளைகளின் புத்திசாலித்தனம் மகிழ்ச்சி அளிக்கும்,வாழ்க்கையில் அனைத்து வசதிகளும் பெற்று மன மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்,அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், சுயதொழில் லாபம் உண்டாகும்,தொழிலில் மேன்மை அடைவீர்கள், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடை பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.