கும்ப ராசி
தடைக்கற்களையும் படிக்கட்டுகளாக மாற்றி பயணம் செய்யக்கூடிய, எதிரிக்கும் நல்லதே நினைக்கும் கும்பராசி அன்பர் களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக் கூடிய எண்கள் 3, 5 இந்த எண்களில், அல்லது கூட்டுத் தொகயில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும், அது சாதகமாக முடியும். 3, 5, ஆகிய எண்களின் இரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக் கிக்கொள்ள முடியும். கனக புஷ்பராகம் மோதிரம் மற்றும் புதன் யந்திரம் பயன்படுத்தினால் பலன் கூடும். பலன்கள்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும், பண வரவு உண்டாகும், தன வரவு தாராளமாக இருக்கும், முயற்சியில் வெற்றி கிடைக்கும், சாதூர் யமான பேச்சால் சாதகமான சூழ்நிலையை உண் டாக்குவீர்கள், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள், குல தெய்வ வழிபாட்டால் குதுகலம் அடைவீர்கள், புத்திரர்களால் நன்மை உண்டாகும், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை நீங்கும், பெரியவர்களால் அனுகூலம் கிடைக்கும், கடன் தொல்லை நீங்கும், கோர்ட் வழக்கு சாதகமாக அமையும், கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல் தீரும், காரியத்தடை நீங்கி வெற்றி உண்டாகும்,வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்,எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்,உழைப்பிற்கேற்ற பலன் மற்றும் புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள், பிள்ளைகளால் அமோகமாக லாபத்தை அடைவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.