மீன ராசி
செய்நன்றி மறவாத மனம் பெற்ற,காலம் வரும்போது செஞ்சோற்றுக் கடனை திருப்பி செய்வதற்கு ஒருபோதும் தயங்காத மீன ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 1, 3, 9. இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும். 1, 3, 9 ஆகிய எண்களின் இரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளைஎளிதாக்கிக் கொள்ள முடியும். சூரியன் யந்திரம், கனகபுஷ்பராகம் மோதிரம் மற்றும் பவள மோதிரம் பயன்படுத்தினால் பலன் கூடும். பலன்கள்: உடல் நலம் நன்றாக இருக்கும், கற்பனைத்திறன் அதிகரிக்கும், மனஅமைதி ஏற்படும், எதிர்பாராத பண வரவு உண்டாகும், குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும், தன வரவு தாராளமாக இருக்கும், முயற்சியில் வெற்றி கிடைக்கும்,சாதூர்யமான பேச்சால் சாதகமான சூழ்நிலையை உண்டாக்குவீர்கள், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்,புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும், மறைமுக போட்டியை வெல்வீர்கள், வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள்,எதிரிகள் ஏமாந்து போவார்கள், சோதனைகள் பலவற்றை எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள், கௌரவம் அதிகரிக்கும், கடின உழைப்பால் புகழ் அடைவீர்கள், தகப்பனாரின் உடல் நலம் சீராகும், தந்தையின் ஆதரவு, பாசம் முழுமையாக உங்களுக்கு கிடைக் கும், பிள்ளைகள் புத்திசாலியாக வாழ்வார்கள், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், சுயதொழில் லாபம் உண்டாகும், எடுத்த காரியத்தை நிறை வேற்றுவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.