கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

2011 ஆங்கிலப் புதிய வருடபலன்கள்

இப்புத்தாண்டு துவாதசி,விசாகநட்சத்திரம்,
 சித்தயோகம், கன்னியா லக்னத்தில்
பிறக்கிறது. லக்னத்தையும் 3, 11-ஆம்
இடங்களையும் குரு பார்ப்பதுடன், சனி,
சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோரையும்
குரு பார்ப்பதால் இந்த ஆண்டில் பிற
நாட்டுத் தொடர்பு வலுப்பெறும்.சகோதர
ஒற்றுமை கூடும். தகவல் தொடர்பு
இனங்களால் ஆதாயம் கூடும்.ஏற்றுமதி-
இறக்குமதிஇனங்களால் அதிகம் ஆதாயம்
பெறலாம்.குருவின்நட்சத்திரத்தில் சந்திரன்
அமர்ந்து,குருவால் பார்க்கப்படுவதால் நாடு
சுபிட்சம் பெறும்.மக்கள் மனதில் தெய்வபக்தி
கூடும். அறப்பணிகள் வளரும். கோயில்கள்
புதுப் பொலிவு பெறும். தனகாரகன் குரு தன்
சொந்தவீட்டில் வலுத்திருப்பதால் பொருளாதார
நிலையில் விசேடமான வளர்ச்சி காணலாம்.
கணிதம்,வியாபாரம்,எழுத்து,பத்திரிகை,புத்தக
வெளியீடு, கடல் வாணிபம், திரவப்பொருள்,
தரகு,கமிஷன்,ஏஜன்ஸி போன்ற துறைகளில்
நல்லமுன்னேற்றம் காணமுடியும்.லக்னத்துக்கு
4-ல், தனுசில் சூரியன்,செவ்வாய்,ராகு ஆகியோர்
இருப்பதாலும், தனுசு போர்க் கருவிகளைக்
குறிக்கும்ராசி என்பதாலும், நெருப்பு ராசி என்பதாலும்போர்பயம்ஏற்படும்.விபத்துக்கள்
அதிகரிக்கும்.நெருப்பு,ஆயுதங்கள், வெடிப்
பொருட்கள் ஆகியவற்றால் சேதம் உண்டாகும்.
4-ஆம் இடம் நிலம்,மனை,வீடு,வாகனங்களைக்
குறிப்பதால் சொத்துக்களுக்குச் சேதம்
உண்டாகும்.3,8-ஆம் வீட்டோன் செவ்வாயும்,
விரயாதிபதி சூரியனும் ராகுவுடன் கூடுவதால்
அரசியல் தலைவர்களின் உடல்நிலை பாதிக்கும்.
கெட்ட பெயரும் வரும். அரசியலில் ஈடுபாடு
உள்ளவர்கள் பொறுப்புடன் செயல்படுவது
அவசியமாகும்.கேது 10-ல் இருப்பதால் ஆன்மிகத்
தொடர்புள்ளவர்கள் வளர்ச்சி காண வாய்ப்பு
உண்டாகும்.பொதுவாக இந்தப் புத்தாண்டில்
ரிஷப, கடக, கன்னி, விருச்சிக, கும்ப
 ராசிக்காரர்களுக்கு 7-5-2011 வரையிலும்,
அதன்பிறகு மிதுன, சிம்ம,
துலா, தனுசு, மீன ராசிக்காரர்களுக்கும் நற்
பலன்கள் உண்டாகும்.ஒவ்வொருவருக்கும்
ஜனன கால ஜாதகம் என்று ஒன்று உண்டு.
ஜாதகப்படி சுப யோக பலம் உள்ள தசை, புக்தி,
அந்தரங்கள் நடப்பவர்களுக்கு இப்புத்தாண்டில்
 நற்பலன்கள் அதிகரிக்கும்.கோசாரமும், தசா
புக்தியும் சாதகமாக உள்ளவர்களுக்கு சுப பலன்கள்
இரட்டிப்பாகும்.இனி ஒவ்வொரு ராசிக்காரருக்கும்
இந்தப் புத்தாண்டில் விளையக்கூடிய பொதுப்
பலன்களைப் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.