கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மேஷம்


ராசிக்கு 6-ல் சனி இருப்பதால் உழைப்புக்குரிய பயனைப் 
பெறுவீர்கள்.எதிரிகள் அடங்கிப்போவார்கள்.செய்துவரும் 
தொழிலில்சீரானவளர்ச்சியைக் காணலாம்.தொழிலாளர்களது 
கோரிக்கைகள் ஒருசிலநிறைவேறும்.சுரங்கங்கள், ஆலைகள், 
தோட்டங்கள்,தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் 
வளர்ச்சி காண்பார்கள். குரு 12-ல் அமர்ந்து, 4,6,8-ஆம்இடங்களைப் 
பார்ப்பதால் சுகம் கூடும். பிரச்னைகள் குறையும். ஆயுள் பலம் 
அதிகரிக்கும் நிலபுலங்கள் லாபம் தரும்.சுக்கிரன்,புதன் ஆகியோர்
8-ல் அமர்ந்து, 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கலைஞர்களது 
திறமை பளிச்சிடும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். விபரீத 
ராஜயோகம் உண்டாகும். மாதர்களது எண்ணம் ஈடேறும்.
வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற 
துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 9-ல் 
சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் இருப்பதால் வெளிநாட்டுத் 
தொடர்பு ஓரளவு பயன்படும். மக்களாலும், தந்தையாலும் 
அளவோடு நலம் உண்டாகும். 3-ல் உள்ள கேது மனோபலத்தைக் 
கூட்டுவார். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 
எதிர்ப்புக்கள் குறையும்.மே 8-ஆம் தேதி முதல் குரு ஜன்ம ராசிக்கு 
இடம் மாறி, 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பதால் மக்கள் நலம் 
சீர்பெறும். கணவன் மனைவி உறவு நிலை பலப்படும். கூட்டாளிகள் 
சாதகமாக இருப்பார்கள். தந்தை நலம் திருப்தி தரும். வெளியூர், 
வெளிநாட்டுத் தொடர்புகளால் பயன் கூடப் பெறுவீர்கள். புனிதப்
 பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.இடமாற்றம், நிலைமாற்றம் 
ஆகியவை உண்டாகும். உழைப்புக்குரிய பயன் கிடைக்கத் தவறாது. 
அரசுப் பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உற்சாகமான 
சூழ்நிலை உருவாகும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 8மிடத்துக்கும் 
கேது 2-ஆமிடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் 
சலசலப்புக்கள் ஏற்படும். பயணத்தால் அனுகூலமிராது.
விஷத்தாலும், விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம்.
 வீண்வம்பு கூடாது. நவம்பர் 15 முதல் சனி 7-ஆமிடம் மாறுவதும் 
சிறப்பாகாது. 10-ஆம் வீட்டோன் சனி தன் உச்ச ராசியான துலாத்தில், 
ராசிக்கு 7-ல் இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். 11-
ஆம் வீட்டோன் சனி உங்கள் ராசிக்குப் பாதகாதிபதி என்பதால் சில 
சங்கடங்களும் உண்டாகும். சிலருக்கு இரண்டாவது திருமணம் 
செய்ய வாய்ப்புக் கூடிவரும். சனியைக் குரு பார்ப்பதால் அதிகம் 
சங்கடங்கள் ஏற்படாதவாறு நீங்கள் காக்கப்படுவீர்கள். குரு பிரீதி 
செய்யவும். முருகனை வழிபடவும்.


அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 7, 8.


திசை: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு.


தெய்வம்: முருகன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.