குரு பலம் ஓங்கியிருக்கிறது. லாப ஸ்தானத்தில், தன்
சொந்த வீட்டில் இருக்கும் குரு உங்கள் ராசிக்கு, 3, 5, 7-
ஆம் இடங்களைப் பார்ப்பதுடன், சந்திரன், புதன், சுக்கிரன்,
சனி ஆகியோரையும் பார்ப்பதால் திட, வீர, பராக்கிரமம்
வெளிப்படும்.மக்கள்நலம் மகிழ்ச்சிதரும்.விளையாட்டு,
விநோதங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் ஈடுபட்டு
வெற்றி பெறுவீர்கள். மகப்பேறு பாக்கியம் உண்டாகும்.
கணவன் மனைவி உறவுநிலை திருப்தி தரும்.
பங்குதாரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
திறமைக்குரிய பயன் கிடைத்துவரும். ஸ்பெகுலேஷன்,
கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். திடீர்
அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நல்லவர்களும்
வல்லவர்களும் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.
தெய்வப் பணிகள் ஈடேறும். திருமணம் போன்ற சுப
காரியங்கள் நிகழும்.வாழ்க்கைத்துணைவரால் ஆதாயம்
பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள்,
இரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்கள், விஞ்ஞானிகள்,
ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான
சூழ்நிலை நிலவிவரும்.புத்திசாலித்தனம் பளிச்சிடும்.
மாணவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள்
ஆகியோர் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள்.
2-ல் கேதுவும், 8-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோரும்
இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும்.
புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். எதிலும்
அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபட்டால்
சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். நெருப்பு, மின்சாரம்,
ஆயுதம், விஷம் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும்;எச்சரிக்கை
தேவை. மே 8-ஆம் தேதி முதல் குரு 12-ஆமிடம் மாறுவது
சிறப்பாகாது. வீண் செலவுகளும் இழப்புக்களும் உண்டாகும்.
சுப காரியங்கள் நிகழத் தாமதம் ஏற்படும். மக்கள் நலனுக்காகச்
செலவு செய்ய வேண்டிவரும். ஜூன் 6 -ஆம் தேதி முதல் கேது
ஜன்ம ராசிக்கும் ராகு 7-ஆமிடத்துக்கும் மாறுவதும் சிறப்பாகாது.
மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். உடல் நலனில் கவனம்
தேவைப்படும்.கணவன் மனைவியரிடையே கருத்துவேறுபாடுகள்
உண்டாகும்.கூட்டாளிகளிடம் விழிப்புத்தேவை. நவம்பர் 15முதல்
சனி 6-ஆமிடம் மாறுவதும் தன் உச்ச ராசியில் உலவுவதும்
குருவின் பார்வையைப் பெறுவதும் விசேடமாகும். இதனால் உடல்
நலம் சீராகும். எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும். பொதுநலப்
பணிகளில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில்
வெற்றி காணலாம். வாழ்க்கைத் தரம் உயரும். மற்றையோர்
உங்களைப் பாராட்டுவார்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள்
அதிகரிக்கும்.வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். கடன் தொல்லை
குறைய ஆரம்பிக்கும். தொழில் முன்னேற்றத் திட்டங்களைத் தீட்டி,
அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள்.
சர்ப்ப சாந்தி செய்யவும். லட்சுமி அஷ்டோத்திரம் படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 8.
திசை: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
தெய்வம்: மகாலட்சுமி. |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.