கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மிதுனம்

கோசாரப்படி முக்கியமான கிரகங்கள் அனுகூலமாக இல்லாததால் வருட முன்பகுதி சாதாரணமாகவே காணப்படும். எதிலும் முழுமையான பயனைப் பெற முடியாமல் போகும். அலைச்சல் கூடும். தொழிலில் சிறுசிறு பிரச்னைகள் உண்டாகும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். கோபத்தால் மற்றையோரது அதிருப்திக்கு ஆளாவீர்கள். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கூட்டாளிகளால் சங்கடங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. மக்களால் மன அமைதி குறையும். 

குரு 10-ல் அமர்ந்து 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பநலம் சீராகவே இருந்துவரும். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்களும் சேரும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். கடன் தொல்லை கட்டுக்குள் அடங்கியிருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். 10-ஆம் வீட்டோன் குரு 9-ஆம் வீட்டோன் சனியைப் பார்ப்பதால் தான, தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள், காண்ட்ராக்டர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 

மே 8-ஆம் தேதி முதல் குரு 11-ஆமிடம் மாறி, 3, 5, 7-ஆம் இடங்களைப்பார்ப்பதால் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். தொழில் அதிபர்களுக்கு ஆதாயம் கூடும். புதிய தொழில் துறைகளில் ஈடுபாடு உண்டாகும். தொட்டது பொன் ஆகும். மன உற்சாகம் கூடும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். முயற்சி பலிதமாகும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் 

வாழ்க்கைத்துணைவராலும் நலம் கூடும். பொன்னும் பொருளும் சேரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 6-ஆமிடத்துக்கும் கேது 12 -ஆமிடத்துக்கும் மாறுவதால் வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். 

ஆன்மிகப்பணிகளுக்காகச் செலவு செய்வீர்கள். நவம்பர் 15 முதல் சனி 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் சனியைக் குரு பார்ப்பதாலும், சனி 9-ஆம் வீட்டோனாகி 5-ல் இருப்பதாலும் மக்களால் பாக்கியம் உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிப்பதற்கும் வாய்ப்புக் கூடிவரும். சர்ப்ப சாந்தி செய்யவும். குருவை வழிபடவும். 

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6. 

திசை: வடக்கு, தென்கிழக்கு. 

தெய்வம்: மகாவிஷ்ணு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.