பெரும்பாலான கிரகங்கள் அனுகூலமாக
இருப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.
மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில்
நிகழும். திருமணம் போன்ற சுப காரியங்கள்
நிகழ வாய்ப்புக் கூடிவரும். தெய்வ தரிசனம்,
சாதுதரிசனம் ஆகியவைகிட்டும்.பொருளாதார
நிலையில்விசேடமானவளர்ச்சியைக்காணலாம்.
எதிரிகள் விலகிப் போவார்கள். செல்வாக்கும்
மதிப்பும் உயரும். முயற்சி பலிதமாகும். மகப்பேறு
அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.
பெற்றோர் நலம் சிறப்பாக இருந்துவரும். பதவி
உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை
கிட்டும். தொழிலாளர்களது கோரிக்கைகளில் சில
ஈடேறும். கலைத்துறையினருக்கு வெற்றி
வாய்ப்புக்கள் கூடும். தகவல் தொடர்பு இனங்கள்
லாபம் தரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும்.
விஞ்ஞானிகள் பாராட்டுக்களுக்கு உரியவர்கள்
ஆவார்கள்.இரசாயனத்துறையினருக்கு
அனுகூலமான போக்குத் தென்படும். அரசியல்
ஈடுபாடு ஆக்கம் தரும்.நிர்வாகத்துறையினருக்கு
வளர்ச்சி கூடும். அயல்நாட்டு வர்த்தகம் பெருகும்.
பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும்.
வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கும்,
வேலை பார்க்க விரும்புபவர்களுக்கும் அதற்கான
வாய்ப்பு கனிந்துவரும். மே 8-ஆம் தேதி முதல் குரு
10-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது
என்றாலும் 9-ஆம் வீட்டோன் 10-ல் உலவுகிறார்
என்பதால் புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
6-ஆம் வீட்டோன் 10-ல் இருப்பதால் தொழில்
ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். குரு 10-ல்
அமர்ந்து, 2, 4, 6-ஆம்இடங்களைப் பார்ப்பதால்
பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். சுகம்
கூடும். பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும்.
ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 5-ஆமிடத்துக்கு
மாறுவது சிறப்பாகாது. இதனால் மக்கள் நலம்
பாதிக்கும். மறதியால் அவதி உண்டாகும். வயிறு
சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். கேது 11-
ஆமிடம் மாறுவதால் மன உறுதி கூடும்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.அறப்
பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். நவம்பர் 15
முதல் சனி 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 7-
ஆம் வீட்டோன் 4-ல் உலவுவதால் நலம்
உண்டாகும். சொத்துக்கள் சேரும். 8-ஆம் வீட்டோன்
4-ல் உலவுவதால் சில இடர்ப்பாடுகளும் உண்டாகும்.
சனியைக் குருபார்ப்பதால் சனியால் விளையக்கூடிய
கெடுபலன்கள் குறையும் என்றே சொல்லலாம். குரு,
ராகு ஆகியோருக்கு வருடப் பின்பகுதியில் பிரீதி,
பரிகாரங்களைச் செய்யவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 8, 9.
திசை: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
தெய்வம்: முருகன், சக்தி. |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.