சிம்மம்
குரு 8-லும் சனி 2-லும் இருப்பது சிறப்பாகாது. முக்கியக்
கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாதததால் சில
இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். மனத்தில் ஏதேனும்
சலனம் இருந்துவரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி
காண அரும்பாடுபடவேண்டிவரும். மக்களால் மன வருத்தம்
உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு
குரு பார்வையால் விலகும். சுக்கிரனும் புதனும் 4-ல் அமர்ந்து
குரு பார்வையைப் பெறுவதால் சொத்துக்கள் சேரும். சுகம்
கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ஆடை, அணிமணிகள் சேரும். 5-ல் சூரியனும் செவ்வாயும்,
ராகுவும் இருப்பதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்
. என்றாலும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும்.
உஷ்ணாதிக்கம் அதிகரிக்கும். 11-ல் உலவும் கேது மனோ
பலத்தைக் கூட்டுவார்.ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு
உள்ளவர்களுக்கும் அறப்பணியாளர்களுக்கும் ஞானிகளுக்கும்
அனுகூலமான போக்குத் தென்படும். வியாபாரம், கணிதம்,
எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள்
வளர்ச்சி காண்பார்கள். குரு 12-ஆமிடத்தைப்பார்ப்பதால்
வீண் செலவுகள் குறையும். சுபச் செலவுகள் கூடும். மக்கள்
நலமுன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
புதிய சொத்துக்களை வாங்கவும் செலவு செய்வீர்கள். மே 8ம்
தேதி முதல் குரு 9-ஆமிடம் மாறுவது விசேடமாகும்.
அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். மகப்பேறு பாக்கியம்
கிட்டும்.ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள்
லாபம் தரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு
ஆகியவை கிட்டும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி
காணலாம். தொழில் அதிபர்களது எண்ணம் ஈடேறும்.
திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தொலைதூரத்
தொடர்பு பயன்படும். வெளிநாடு சென்று படிக்கவும்,
வேலை பார்க்கவும் வாய்ப்புக் கூடிவரும். தெய்வப் பணிகள்
நிறைவேறும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். சாதுக்கள்,
ஞானிகள் தொடர்பு உண்டாகும். அதனால் மனத்தெளிவும்
பிறக்கும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 4-ஆமிடத்துக்கு
மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் கூடும். உடல் சோர்வு
ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
கேது 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். தொழிலில் சீரான
வளர்ச்சியைக் காணலாம். நவம்பர் 15 முதல் சனி 3-ஆமிடம்
மாறுவது விசேடமாகும். ஏழரைச் சனி முற்றிலுமாக
விலகுகிறது. தடைகள், குறுக்கீடுகள் அனைத்தும் விலகி,
வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உருவாகும். துணிச்சலான
காரியங்களில் ஈடுபடுவீர்கள்.சமுதாய நலப்பணிகளில்
ஈடுபாடு உண்டாகும். மற்றையோர் உங்களைப் போற்றிப்
புகழுவார்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். முக்கியமான

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உற்சாகமாக நடைபோடுவீர்கள்.
துர்கையையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6, 7, 9.
திசை: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு, தெற்கு.
தெய்வம்: முருகன், ருத்திரன்(சிவன்).
துர்கையையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6, 7, 9.
திசை: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு, தெற்கு.
தெய்வம்: முருகன், ருத்திரன்(சிவன்).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.