குரு 7-ல் அமர்ந்து உங்கள் ஜன்ம ராசியையும் 3, 11-ஆம் இடங்களையும் பார்ப்பதுடன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகியோரையும் பார்க்கிறார். இதனால் ஜன்மச் சனியின் பாதிப்பு குறையும். உடல் நலம் சீராகவே இருந்துவரும். மனக்குழப்பங்கள் விலகும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். ஆதாயம் பெருகும். பண வரவு கூடும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். உத்தியோகத்தில் வளர்ச்சி காணலாம்.
பகுதி நேரப்பணியின் மூலமும் வருமானம் கிடைக்கும். முயற்சி வீண்போகாது. முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கூட்டுத் தொழில் லாபம் தரும். நண்பர்களும் கூட்டாளிகளும் உதவுவார்கள். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு என்றாலும் பாதுகாப்பும் தேவை. வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்கு நிறைவேறும். 4-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் உலவுவதால் நெருப்பு, மின்சாரம், கூரிய ஆயுதங்கள், வெடிப்பொருட்களால் விபத்து ஏற்படலாம்; எச்சரிக்கை தேவை.
மே 8-ஆம் தேதி முதல் குரு 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அரும்பாடுபடவேண்டிவரும். சுகம் குறையும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கூட்டாளிகளால் குழப்பம் உண்டாகும். நண்பர்கள் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். ஜன்ம சனிக்குக் குருவின் பார்வை விலகுவதால் உடல் நலம் பாதிக்கும். மனத்தில் நிம்மதி குறையும். தலை சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 3-ஆமிடத்துக்கு மாறுவதால் அலைச்சல் குறையும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். பிற மொழி, மதங்களைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். கேது 9 -ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தந்தை நலம் பாதிக்கும். தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புத் தேவை. நவம்பர்
15 முதல் சனி 2-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. என்றாலும் 5-ஆம் வீட்டோன் 2-ல் அமர்ந்து, குருவின் பார்வையைப் பெறுவதால் குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும். 6-ஆம் வீட்டோன் 2-ல் இருப்பதால் கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட நோய்நொடிகள் ஏற்படும். பேச்சால் சில பிரச்னைகள் உண்டாகும். நாவடக்கம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
சனி, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும். வருடப் பின்பகுதியில் குருப் பிரீதியும் செய்யவேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6, 7, 8.
திசை: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
தெய்வம்: மகாவிஷ்ணு. |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.