ராசிநாதன் குரு ராசியிலேயே இருப்பதால் உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகவே இருந்துவரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்க்கும் குருவால் மக்கள் நலம் சீர்பெறும்.
வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். தந்தையால் நலம் கூடும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். 4-ல் கேதுவும் 7-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். 9-ல் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் இருப்பதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். மக்களால் பாக்கியம் கூடும். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். 10-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் உலவுவதால் அரசுப் பணிகள் ஆக்கம் தரும்.
அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகளும் பொறுப்புக்களும் வந்து சேரும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர், எலக்ரிக்கல் இனங்கள் லாபம் தரும். நெருப்பு, ஆயுதம், வெடிப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.
மே 8 முதல் குரு 2-ஆமிடம் மாறுவது விசேடமாகும். இதனால் குடும்ப நலம் சிறக்கும். பேச்சாற்றல் வெளிப்படும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணமுடியும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கடன் தொல்லை குறையும். பிரச்னைகள் எளிதில் தீரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். புதிய முயற்சிகள் கூடிவரும். தொழில் அதிபர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கேது 3-ஆமிடம் மாறுவதால் தாய் நலம் சீர்பெறும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீர வழிபிறக்கும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். நவம்பர் 15 முதல் சனி 8-ஆமிடம் மாறுகிறார்.
அஷ்டமச் சனியின் காலம் ஆரம்பமாகிறது. அதிகம் உழைக்க வேண்டி வரும். வீண் செலவுகள், இழப்புக்கள் ஆகியவை ஏற்படும். சனியைக் குரு பார்ப்பதால் சனியால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையும். கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து வருவது அவசியமாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 4, 6, 9.
திசை: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு.
தெய்வம்: சிவன், சக்தி, முருகன். |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.