கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

கும்பம்

ராசிநாதன் சனி 8-ல் இருந்தாலும் 2-ல் தன் சொந்த வீட்டில் இருக்கும் குரு பார்ப்பதால் அஷ்டமச் சனியின் பாதிப்புக்கள் குறையவே செய்யும். குரு பலம் இருப்பதால் பொருளாதார நிலை உயரவே செய்யும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், இரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்புக் கூடும். 5-ல் கேது இருப்பதால் மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். 10-ல் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் இருப்பதாலும், 10-ஆம் வீட்டை குரு பார்ப்பதாலும் செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். 11-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் இருப்பதால் அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமையால் சாதனை பல ஆற்றுவீர்கள். மற்றையோர் உங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

எலக்ட் ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ் இனங்களால் லாபம் கூடும். வெளிநாட்டுப் பயணத்தாலும், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வியாபாரம் மற்றும் தொழிலாலும் லாபம் கூடும்.
உடல் நலம் சீராக இருந்துவரும். மே 8-ஆம் தேதி முதல் குரு 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கொடுக்கல்-வாங்கல் இனங்களில் எச்சரிக்கை தேவை. சுப காரியங்கள் நிகழத் தாமதம் உண்டாகும். மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம்; விழிப்புத் தேவை. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். குடும்பத்தில் குழப்பங்கள் சூழும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது. குடும்பத்தாராலும், பெரியவர்களாலும் சிறுசிறு பிரச்னைகள் சூழும்.

மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 10-ஆம் இடம் மாறுவது சிறப்பாகும். தொழிலில் வளர்ச்சி காணலாம். கேது 4-ஆமிடம் மாறுவதால் அலைச்சல் கூடும். தாய் நலம் பாதிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு, வியாஜ்ஜியங்களில் ஈடுபட வேண்டிவரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலமிராது. நவம்பர் 15 முதல் சனி 9-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும், அவர் உங்கள் ராசிநாதன் என்பதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும், சுக்கிரனின் வீட்டில் உலவுவதாலும் நலம் புரிவார். தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

தெய்வம்: ஆஞ்சநேயர், ஐயப்பன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.