கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மகரம்


6-ல் கேதுவும், 11-ல் சந்திரன், புதன், சுக்கிரனும் இருக்கிறார்கள். இதனால் உங்கள் மனத்தில் உற்சாகம் கூடும். எதிரிகளை வெல்வீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அறநிலையங்களில் தொடர்பு கொண்டு பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவுவார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். 3-ல் குருவும், 12-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோரும் இருப்பதால் மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். பணம், பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. அரசாங்கத்தாரால் பிரச்னைகள் சூழும். அரசு அபராதம் கட்ட நேரலாம். ஜாதக பலம் இல்லாதவர்களுக்கு மரணத்துக்கு நிகரான கண்டம் உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது.

பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். மேலதிகாரிகளின் சொற்படி நடந்து கொண்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். உங்கள் பொறுப்புக்களை மற்றையோரிடம் ஒப்படைக்கலாகாது. குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கலாகாது.
உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் பொறுப்புணர்ந்து காரியமாற்றுவது அவசியமாகும். சிலர் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேரலாம். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். அதனால் தூக்கம் கெடும். பயணத்தால் அனுகூலமிராது. மே 8-ஆம் தேதி முதல் குரு 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் அவர் 8, 10, 12-ஆம் இடங்களைப் பார்ப்பதனால் பிரச்னைகள் குறையத் தொடங்கும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும்.

வீண் செலவுகளும் இழப்புக்களும் இனி இராது. ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 11-ஆமிடம் மாறுவதால் அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
புதியவர்களது தொடர்பு பயன்படும். கேது 5-ஆமிடம் மாறுவதாலும், கேதுவுக்கும் 5-ஆம் வீட்டுக்கும் 12-ல் குரு இருப்பதாலும் மக்கள் நலம் பாதிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். மறதி உண்டாகும். நவம்பர் 15 முதல் சனி 10-ஆமிடம் மாறி வலுப்பெறுவதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும் செய்து வரும் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு ஆதாயம் கூடும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். விண்வெளி சம்பந்தப்பட்ட இனங்களில் தொடர்புடையவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கறுப்பு நிறப்பொருட்கள், பழைய பொருட்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். உழைப்பு வீண்போகாது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பதவிகளும் முக்கியப் பொறுப்புக்களும் கிடைக்கும்.


அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 7, 8.

திசை: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு.

தெய்வம்: ஐயப்பன், ஆஞ்சநேயர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.