கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 15 டிசம்பர், 2014

2014-2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் -5

சீகரப் பேச்சும், வழிநடத்தும் திறனும் மிக்க கடகராசி நேயர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை 5ம் வீட்டில் அமர்கிறார், சனி பகவான்.
குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சொத்து தீர்ப்பு சாதகம் ஆகும். ப்ளான் அப்ரூவல், வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும். சனிபகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5ல் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிள்ளைகளை அரவணைத்துப் போவது நல்லது. மகளின் திருமணத் துக்காக கடன் வாங்க வேண்டி வரும். கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனைப் பிரிய நேரிடலாம். கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங் களைத் தவிருங்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் சஷ்டம பாக்கியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 5ம் வீட்டில் சனி செல்வதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பண வரவு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. புது வேலை அமையும். 14.6.15 முதல் 5.9.15 வரை, உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக 4ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், தாய்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள், வீண் பழி வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்கிறார். சிலர், புதுத் தொழில் தொடங்குவார்கள். அடகில் இருந்த நகை மற்றும் வீட்டுப் பத்திரத்தை மீட்க வழி பிறக்கும். உங்கள் சப்தம அஷ்டமாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், செலவுகள் அதிகமாகும். மற்றவர் முன்னிலையில் மனைவியைக் குறைவாகப் பேச வேண்டாம். விமர்சனங் களைத் தவிர்க்கவும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். அரசு அதிகாரிகளை பகைக்காதீர்கள்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.08.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் திருதியாதிபதியும்விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் தன்னம்பிக்கை குறையும். கடந்த கால இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். இளைய சகோதர வகையில் பிணக்குகள், பயணங்களால் அலைச்சல் உண்டு. பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தி லேயே சனி வக்ரமாக்ச் செல்வதால், இந்த கால கட்டத்தில் தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
சனி 2ம் இடத்தைப் பார்ப்பதால்,  எவரையும் எடுத்தெறிந்துப் பேச வேண் டாம். அக்கம்பக்கத்தாரிடம் அளவுடன் பழகுங்கள். வாக்குறுதிகளை நிறை வேற்றப் போராட வேண்டி வரும். சனி 7ம் வீட்டைப் பார்ப்பதால் மனை வியுடன் வாக்குவாதம், அவருக்கு மருத் துவச் செலவுகள் வந்துபோகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு கூடும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார்.  
வியாபாரத்தில், புது யுக்திகளால் லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் வாய்ப்பு களும் வரும். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வுக்காக தேர்வெழுதிக் காத்திருந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்கள், பாதியிலேயே விட்ட கல்வியைத் தொடர்வார்கள். நினைத்தபடி திருமணம் முடியும். மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் பரிசுபாராட்டுகள் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், புதிய திட்டங்களை நிறைவேற்றும் வல்லமையையும், மன நிம்மதியையும் தரக்கூடியதாக அமையும்.
பரிகாரம்: பௌர்ணமி அல்லது தசமி திதி நாளில், திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை சென்று ஸ்ரீவக்ரகாளி அம்மனுக்கு நெய் தீபமேற்றி வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.

ல்லோர் மீதும் நம்பிக்கை கொண்ட சிம்மராசி நேயர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை சுக வீடான 4ம் வீட்டில் சனி அமர்கிறார். இந்த காலத்தில் வாழ்க்கை சற்று சவாலாகவே இருக்கும்.
உங்கள் ராசிக்கு 6 மற்றும் 7ம் வீட்டதிபதியாக சனி வருவதால் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். ஒப்பிடுதலைத் தவிர்க்கவும். எதிலும் முன்யோசனை யுடன் செயல்படவும். செலவுகள் துரத்தும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரங்களை சரிபார்ப்பதுடன், வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படவும். டிரைவிங் லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை உரியநேரத்தில் புதுப்பிக்கவும்; அபராதம் செலுத்த நேரிடலாம். சிலர், குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த முற்படுவர். அவர்களின் பேச்சைக் கேட்டு, வீண்  சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளா தீர்கள். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் கட்ட வேண்டாம். சாட்சிக் கையொப்பமிட வேண்டாம்.
சனி பகவான் சஞ்சாரப் பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 4ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வழக்கு சாதகமாகும். மகளின் திருமணம் சிறப்புற நிகழும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும்.  30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேற்றுமொழி பேசுபவர் களால் திருப்புமுனை உண்டாகும்.
உங்கள் சஷ்டமசப்தமாதிபதியான சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், வந்து போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிக்கு வேலை கிடைக்கும்.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் தனாதிபதியும் லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் உங்களின் புகழ் உயரும். வேலை கிடைக்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புதுப் பதவி தேடிவரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால், சுபச் செலவுகள் அதிகரிக் கும். பூர்வீகச் சொத்தை செலவு செய்து சீர் செய்வீர்கள்.
சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் கடனாகக் கொடுத்ததை வசூலிப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சனி 10ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைப்பளு, விரும்பத் தகாத இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துசெல்லும்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டும். யாருக்கும் கடன் தரவேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவு களோ, முதலீடுகளோ வேண்டாம். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, துரித உணவகம், பெட்ரோகெமிக்கல் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். திடீர் இடமாற்றங்கள் வந்துபோகும். உங்களை வழக்கில் சிக்கவைக்க சிலர் முயற்சிப்பார்கள்.
கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தாயாரை அனுசரித்துப் போகவும். மாணவர்களே, விளையாடும்போது சிறு காயங்கள் ஏற்படக்கூடும்; கவனம்!
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி வேலைச்சுமை, இடமாற்றங்களை தந்தாலும், தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றிபெற வைக்கும்.
பரிகாரம்: உத்திராடம் நட்சத்திர நாள் அல்லது அமாவாசை தினங்களில், திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீகிருபாபுரீஸ்வரரை தீபமேற்றி வணங்கி வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

லகலப்பான கன்னி ராசிக் காரர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்கிறார்.
பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்றுசேர்வார்கள். தோல்வி முகம் மாறும். குடும்பத்தில், உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பர். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். மகளுக்கு, நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
சிலர், கடன்பட்டாவது வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோனுக்காக பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்கவேண்டாம். அதற்கான வழி வகைகள் பிறக்கும். வீண் பழிகள் விலகும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவர்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் சுகசப்தமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 3ம் வீட்டில் சனி செல்வதால் தைரியம் கூடும்.அரசு காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் மன வருத்தம் நீங்கும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், பேச்சால் பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.  
30.4.15 முதல் 1.8.15 வரை குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். எனினும் பழைய கடனை நினைத்துக் குழம்புவீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும் சஷ்டியாதிபதியுமான சனி, சுயநட்சத் திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்கிறார். இக்கால கட்டத்தில் பூர்விகச் சொத்து கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் பெறுவீர்கள். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்புடன் செயல்படவும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனி அனுஷத்தில் வக்ரமாவதால், சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பண வரவு இருந்தாலும் செலவு களும் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். வீடு, வாகனம் அமையும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், சளி, இறுமல், கழுத்து வலி வந்துபோகும்.
சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்து வழக்கு சாதகமாகும். உயர்கல்வி, பணியின் நிமித்தம் பிள்ளைகளைப் பிரிய நேரிடும். சனி 9ம் வீட்டைப் பார்ப்பதால் செலவுகள் அதிகமாகும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், கனவுத் தொல்லை, வந்துபோகும்.
வியாபாரம் சூடுபிடிக்கும். சந்தை நிலவரம், வாடிக்கையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். உணவு, எரிபொருள், வாகனம், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்.
கன்னிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். உங்களுடைய ஆசைகளை பெற்றோர் நிறைவேற்றி வைப்பார்கள். திருமணம் விரைந்து முடியும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம் பதவியை அள்ளித் தருவதாக அமையும். 
பரிகாரம்: திருவோணம் மற்றும் ஏகாதசி தினங்களில், விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் அருளும் பூவராகவப் பெருமாளை வணங்கி வாருங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.