கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 15 டிசம்பர், 2014

2014-2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் -6


ல்லோருக்கும் நல்லவர்களாகத் திகழும் துலாம் ராசிக்காரர்களே,
16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான், உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.
உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2ம் வீட்டுக்கு வந்து அமர்வதால், இனி உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவார்கள்.
என்றாலும், பாதச்சனியாக வருவதால், வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிலும் உணர்ச்சிவசப்படாமல், அறிவுபூர்வமான அணுகுவது நல்லது.  எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதிசஷ்டமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம் 2ம் வீட்டில் சனி செல்வதால்,  எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், இந்தக் காலகட்டத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.15 முதல் 29.04.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், குடும்ப வருமானம் உயரும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால், நம்பிக்கையின்மை, பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் பாக்யாதிபதியும், விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பணம் வரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகிச் செல்வதால், மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சனிபகவான் 4ம் வீட்டைப் பார்ப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் செய்யவேண்டி வரலாம். 8ம் வீட்டைப் பார்ப்பதால், வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். லாப வீட்டைப் பார்ப்பதால், திடீர் செல்வம், செல்வாக்கு கூடும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  
வியாபாரத்தில், கணிசமான லாபம் கிடைக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். கடையை விரிவுபடுத்தவோ, புதிய இடத்துக்கு மாற்றவோ செய்வீர்கள். ஸ்டேஷனரி, ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பா். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும்.
கன்னிப்பெண்களே! பாதச் சனி தொடர்வதால், எல்லோரையும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். திருமணம் நிச்சயமாகும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள், மொழி அறிவை வளர்த்துக்கொள்வார்கள். பேருந்து பயணம், விளையாட்டில் கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, முடங்கிக் கிடந்த உங்களை முடுக்கிவிடுவதுடன் செல்வம்  செல்வாக்கையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம்  திருபுவனத்தில் அருளும் கம்பகரேஸ்வரரையும் சரபேஸ்வரரையும் அஷ்டமி திதி அல்லது சனிக்கிழமைகளில் தரிசித்து வாருங்கள். அநாதைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்.

நேர்மையை நேசிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு 16.12.14 முதல் 17.12.17 வரை ஜென்மச்சனியாக அமர்கிறார் சனிபகவான். அதற்காகப் பதறவேண்டாம். அவர், உங்களுக்கு திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஓரளவு நல்லதையே செய்வார்.
சமயோசிதமான பேச்சாலும், செயலாலும் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள்.குடும்பத்தில் அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். எனினும் ஜென்மச் சனி என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்துபோகும். நேரம் தவறி உண்பதால், அல்சர் வரக் கூடும். சிலநேரம் சந்தேகம், மனக்கலக்கத்தால் நிம்மதி பறிபோகும். ஒரு சொத்தை விற்று, மற்றொரு சொத்தைக் காப்பாற்ற வேண்டி வரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர் கள். எவருக்காகவும்  பரிந்துரை செய்ய வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங் களைச் சாதிப்பீர்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் தனபூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில், உங்கள் ராசிக்குள்ளேயே சனி செல்வதால் பணம், சொத்து சேரும். வழக்கில் வெற்றி உண்டு. ஆனால் மனஇறுக்கம், வீண் பிரச்னை வந்து போகும். கர்ப்பிணிகள் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. 14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு விரயச் சனியாக 12ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்கிறார். பழைய கடனை நினைத்துக் கலங்குவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்தில் சனி வக்கரித்து செல்வ தால், திடீர் பணவரவு உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் திருதியாதிபதியும்சுகாதிபதியுமான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று, புதிதாக வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமா வதால், கூடாப் பழக்கவழக்கங்கள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் அஷ்டமலாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், வேலைகள் தடையின்றி முடிவடையும். வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 8.4.17 முதல் 5.8.17 வரை
புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்கிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிய நபரால் ஆதாயம் அடைவீர்கள்.
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால், சவால்களைச் சமாளிக்க வேண்டி வரும். வீடு மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வரும். 7ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.
10ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத் தில் வேலை அதிகமாகும். சுயதொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்களால் பிரச்னைகள் வரும். அரசு விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். கமிஷன், புரோக்கரேஜ், உணவு வகைகளால் லாபம் அடை வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.
கன்னிப்பெண்கள், இணையதளத் தில் கவனமுடன் செயல்படுங்கள்.பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். மாணவர்கள் தகாத நட்புகளைத் தவிர்க்கவும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி ஒருவித அச்சத்தைத் தந்தாலும், ஓரளவு பணவரவையும், அனுபவத்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரையும், ஸ்ரீசனிபகவானையும் சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள்.

கூடி வாழ ஆசைப்படும் தனுசு ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரையிலான காலம், விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் அமைகிறது. எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.
சனி உங்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால், ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். ராசிக்கு 12ல் சனி மறைவதால், உங்கள் அடிப்படை நடத்தையை மாற்றிக் கொள்ளாதீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வீண் செலவுகள் வேண்டாம்.
இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். கணவன்மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்றுத் தாமதமாகி முடியும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கு வீர்கள். என்றாலும், அவ்வப்போது வீண் அவநம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயம் வந்துபோகும். எவருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் ராசி நாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால், குடும்பத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும்.14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், நினைத்த காரியம் நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு.  30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்கள் விஷயத் தில் தலையிடவேண்டாம்.
உங்கள் தனசேவகாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சப்தமஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புது வேலை கிடைக்கும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், பொருள் இழப்பு, வீண் டென்ஷன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.
சனி 2ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு இருந்தாலும் பற்றாக் குறையும் ஏற்படும். பேச்சில் கடுமை வேண்டாம். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். சனி 9ம் வீட்டைப் பார்ப் பதால், தந்தைக்கு நெஞ்சு எரிச்சல், ரத்த அழுத்தம், வந்து நீங்கும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங் களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மூலிகை, செங்கல் சூளை, லாட்ஜ், வாகன உதிரிபாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். என்றாலும் பெரிய பொறுப்புகள் கிட்டும். சம்பளம் உயரும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் கூடி வரும். கன்னிப்பெண்களுக்கு, கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமா கும். மாணவர்கள், போட்டித் தேர்வு களில் போராடி வெற்றி பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஓரளவு நன்மையையும், பணவரவை யும், பிரபலங்களின் நட்பையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவாதிரை நட்சத்திர நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை நெய் தீபமேற்றி வழிபடுங்கள்.  புற்றுநோயால் அவதிப்படும் ஏழைகளின் மருத்துவத்துக்கு உதவி செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.