கடினமான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். வருமானம் உயரும். கணவன்மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சேமிக்கத் துவங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில் 11ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீடான துலாம் ராசி விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், புது பொறுப்புகள், தேடி வரும். எனினும் உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால், குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று திரும்பக் கிடைக்கும்.
உங்கள் ராசிநாதன் சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், நீண்ட ஆசைகள் நிறைவேறும்.
15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், விரயம் உண்டு. ஆனால் உங்கள் வளர்ச்சி தடைப்படாது.
16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சஷ்டம பாக்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், இழுபறியான வேலைகள் அனைத்தும் இனி தடையின்றி முடியும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் நண்பர்கள், உறவினர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.
சனி ராசியைப் பார்ப்பதால் ஒருவித படபடப்பு, பதற்றம் வந்து நீங்கும். சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் கல்வி, திருமணம் விஷயங்களில் சிற்சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பூர்வீகச் சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். சனிபகவான் 8ம் வீட்டைப் பார்ப்பதால் வாகனத்தில் செல்லும்போதும், சாலைகளைக் கடக்கும்போதும் கவனம் தேவை. அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும்.
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். தொந்தரவு தந்த உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைவார். தடைப்பட்ட கல்வியில் வெற்றியுண்டு. பெற்றோரின் ஆலோசனையை ஏற்றுச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களுக்கு படிப்பு மேம்படும்.எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர் கல்வியைத் தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு, பாராட்டு உண்டு.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீரைப்போல், உங்களின் செயல் வேகத்தை அதிகரிப்பதுடன், பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சதுர்த்தி தினங்களில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள். பிள்ளைகள் இல்லாத முதியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். கணவன்மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்னை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். பிதுர்வழிச் சொத்தில் தடைகள் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவார்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை, உங்கள் தனாதிபதி குருவின் சாரத்தில், விசாகம் 4ம் பாதம் 10ம் வீட்டில் சனி செல்வதால், சமயோசிதமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். 14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 9ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். பிரிவுகள், விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். திருமணம் கூடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
உங்கள் ராசியாதிபதியும் விரயாதிபதியுமான சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீடு கட்டுவீர்கள். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் அஷ்டமபூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால், தயக்கம், தடுமாற்றம், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
சனி 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத் தைக் காப்பாற்ற வேண்டி வரும். சனி 7ம் வீட்டைப் பார்ப்பதால் தம்பதிக்குள் அனுசரித்துப் போகவும்.சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச்செலவுகள் அதிகமாகும்.
வியாபாரத்தில், விளம்பர யுக்தி களால் லாபத்தை உயர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. என்றாலும் திடீர் இடமாற்றம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் புது வாய்ப்புகள் வரும்.
கன்னிப் பெண்களுக்கு, தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.சிலருக்கு அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, பண வரவையும், புதிய சகாப்தத்தைப் படைக்கும் வல்லமையையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஆரணிபடவேடு வழியில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் யந்திர சனீஸ்வரபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். ஆதரவு இல்லாத மூதாட்டிகளின் பசியாற்ற இயன்றளவு உதவி செய்யுங்கள்.
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எந்த விஷயத்திலும் சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். நிம்மதி யும், தன்னம்பிக்கையும் உண்டு. குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வுகள் நீங்கும். அடகிலிருந்த நகை, வீட்டு பத்திரங்களை மீட்பீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். வீடு இடம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர் கள். வழக்கு சாதகமாகும். தந்தை யின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும்.
பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை, உங்கள் ராசி நாதனும் ஜீவனாதிபதியுமான குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில் 9ம் வீட்டில் சனி செல்வ தால், தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நாடாளுபவர்கள், தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. 14.6.15 முதல் 5.9.15 வரை, உங்கள் ராசிக்கு
அஷ்டமத்துச் சனியாக 8ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், வீண் பிரச்னைகள், காரியத் தடைகள், பண இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படலாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்கள் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனிபகவான் சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், திடீர் யோகம், பண வரவு உண்டாகும். புது வேலை கிடைக்கும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், உற்சாகம் கூடும். சிக்கனம் தேவை. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சுகசப்தமாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வ தால் மனைவிக்கு வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் சொத்து கைக்கு வரும்.
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், கணவன் மனைவிக்குள் விவாதம் எழும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவியின் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு விஷயம் சாதகமாகும். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் அடைவீர்கள். சனி லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு கூடும். பணம் வரும் என்றா லும் செலவுகளும் இருக்கும்.
வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன், புரோக்கரேஜ் மூலம் லாபம் அடை வீர்கள். உத்தியோகத்தில், வேலை குறையும். அதிக சம்பளத்துடன் வேறு வாய்ப்புகளும் வரும். பணி சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்வி விஷயங்களில் சாதகமான சூழல் நிலவும். கல்யாணம் கூடிவரும். புது வேலை கிடைக்கும். மாணவர்கள், உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். விரும்பிய கோர்ஸில் சேருவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், அடுத்தடுத்து வெற்றி களை பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதிநாட்களில் குன்றக்குடி சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு உதவுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.