கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 17 டிசம்பர், 2009

கேக்வகைகள்-1

எக்லஸ் கேக்
தேவையான பொருட்கள் 
  
டின்பால்( கண்டன்ஸ் மில்க்) -- 3 /4 டின் 
கோதுமைமா(மைதா மா ) - 250 கிராம் 
ரவை (இலேசாகவறுத்தது)- 250 கிராம் 
(உருக்கிய )பட்டர் - 250 கிராம் 
சீனி - 100 கிராம் 
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
 வனிலா - 1 தேக்கரண்டி 
பிளம்ஸ் - 25 கிராம் 
கயூ (முநதிரியக்கொட்டை) - 25 கிராம் 

செய்முறை

(1 ) ஒரு பாத்திரத்தில் (உருக்கிய)
 பட்டர் , சீனி ஆகியவற்றை 
போட்டு கேக் பீட்டரினால் நன்றாக 
சீனி கரையுமாறு அடிக்கவும்.

 (2 ) அதன் பின்பு அடித்தவற்றுடன் 
டின் பாலை ( கண்டன்ஸ் மில்க்) 
சேர்த்து கேக் பீட்டரினால் நன்றாக 
கலந்து அடிக்கவும். 

 (3 ) அதன் பின்பு நன்றாக கலந்து 
அடித்தவற்றுடன் ,பேக்கிங் பவுடர்,
கோதுமைமா(மைதாமா ) இலேசாக 
வறுத்த ரவை ஆகியவற்றை 
சேர்த்து நன்றாக கலக்கவும் . 

 (4 ) நன்றாக கலக்கிய பின்பு 
இவற்றுடன் ப்ளம்ஸ் , கயூ 
(முந்திரிகை வற்றல்) ஆகியவற்றை 
சேர்த்து ஓரளவு கலக்கவும் (அதிகம் 
கலக்க கூடாது ,அதிகம் கலந்தால் 
ப்ளம்ஸ் ,கயூ (முந்திரிகை வற்றல் ) 
ஆகியவை கீழே சென்றுவிடும் )) 

 (5 ) பின்பு இக்கலவையை கேக் 
செய்யும் தட்டில் ஊற்றி பரப்பி 
பேக் செய்யவும் (250 சி யில் 20 
நிமிடங்கள் அதன் பின்பு 200 சி யில் 
20 நிமிடங்கள் அதன் பின்பு 180 
சி யில்10 சி யில் 10 நிமிடங்கள் 
பேக் செய்யவும்ஆனால் 
இது அவனுக்கு அவன் 
வித்தியாசப்படும் )

 (6 ) இப்போது சுவையான சத்தான 
முட்டை சேர்க்காத மில்க்மைட்
 கேக் தயாராகி விட்டது . இக் கேக் 
அண்ணளவாக ( 2 - 4 ) நபர்களுக்கு 
போதுமானது 

  ஆயத்த நேரம் 

(10 -15 ) நிமிடங்கள் (அண்ணளவாக)
  
  பேக் செய்யும் நேரம் 

50 நிமிடங்கள் (அண்ணளவாக)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.