புதன், 16 டிசம்பர், 2009
மூலிகை - 1 உள்ளி(பூண்டு)
மூலிகை - 1
உள்ளி(பூண்டு)
இதன் தாவரயியல்பெயர் ஆலியம்சட்டைவம்லின்
இது வெங்காயவகை தாவர இனத்தை சேர்ந்தது
(லில்லியாசியே) ஆகும் .இதில் கல்சியம் இரும்பு
மக்னீசியம் பொஸ்பரஸ் செம்பு துந்தநாகம்
காபோவைதரேற்,புரதம்,தையமின்,உயிர்சத்து- சி
ஆகியசத்துகள் காணப்படுகின்றன உலகின் எல்லா
பாகங்கலிலும் எல்லா நேரங்களிலும் கிடைக்ககூடிய
ஒரு எளிமையான உணவு பொருள். இது உணவுக்கு
சுவை,மணம் ஆகியவற்றை கொடுக்கவும் அத்துடன்
மருந்து பொருளாகவும் பயன்படுகிறது சுமார் 5௦௦௦
ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய மன்னர்கள்
பிரமாண்டமான பிரமிட்டைகட்டிய தங்களதுஅடிமை
வீரர்களின் சக்தியை தாக்கு பிடிக்கும் திறனை
அதிகரிப்பதற்காக அவர்களுடைய உணவில் அதிகம்
உள்ளியை (பூண்டை) சேர்த்து கொடுத்ததாக வரலாறு
கூறுகின்றது அத்துடன் கிரேக்க ஒலிம்பிக் வீரர்களும்
ரோமானியபோர்வீரர்களும் தங்களை தீயசக்தி அனுகாது
இருக்கவும் உடல் வலிமை பெறவும்,ஆற்றலுடன்
வாழவும் உள்ளி (பூண்டை) பச்சையாக சாப்பிட்டதாகவும்
வரலாறு கூறுகின்றது இதன்மருத்துவ குணத்தை அறிந்த
மருத்துவவல்லுனர்கள் காலம்காலமாக இதை பயன்படுத்தி
வந்துள்ளனர் எனகூறலாம் இதயநோய்க்கு காரணமான
கொலஸ்ராலை இது கட்டுபடுத்துகிறது என மருத்துவ
வல்லுனர்கள் கூறுகின்றனர் இதனால் தான் இத்தாலியர்கள்,
சீனர்கள் தங்களுடைய உணவில் அதிகம் உள்ளியை
(பூண்டை) சேர்த்து உண்கின்றார்கள் என அவர்களுடைய
வரலாறுகள் கூறுகின்றன அத்துடன் இதில் நூற்றுக்கு
மேற்பட்ட மருத்துவகுணங்கள் அடங்கி உள்ளது
சிலருக்கு உள்ளி (பூண்டு) ஒவ்வாமை
காணப்படுகிறது உள்ளியை (பூண்டு) அஸ்பிரின்
மருந்தை போல இரத்தத்தை இலேசாக்கி இரத்த
உறைவைதடுப்பதால் அறுவை சிகிச்சையின்
முன் உள்ளியை (பூண்டை) உணவில் சேர்த்து
கொள்ள வேண்டாம் என வைத்தியர்கள்
ஆலோசனை கூறுகின்றனர் உள்ளியை
(பூண்டை) அளவுக்கு அதிகமாக உண்பதால்
ஆபத்தை உண்டாக்கும் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

இக் கலைகழகத்தினை பார்வையிட்டு தங்களுடைய கருத்தினை கூரியமைக்கு இக்கலை கழகம் உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறது
பதிலளிநீக்கு