கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 22 மே, 2010

விக்ருதி ஆண்டு ராசி பலன்

கும்பம்
ஈரப் பார்வையால் எல்லோரையும் தன்வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட நீங்கள், எப்போதும் இதயத்திலிருந்து பேசுவீர்கள்.
சோதனைகள் பல வந்தாலும் அஞ்சாமல் அதை எதிர்கொள்வீர்கள்.உங்கள் பூர்வபுண்யாதிபதியின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அடிமனதிலிருந்த பயம் நீங்கும். சோம்பல், விரக்தி விலகும். வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற எண்ணம் வரும். ராசிக்கு 2ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது வருடம் பிறப்பதால் உங்கள் பேச்சிலிருந்த முரட்டுத்தனம் நீங்கி இனி கனிவாகப் பேசுவீர்கள். முடங்கிக் கிடந்த நீங்கள் இனி நிமிர்வீர்கள். உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் கருத்து மோதல்களாலும் பிரிந்திருந்த கணவன்&மனைவி இனி சேர்வீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் டென்ஷனாக்கிக் கொண்டிருக்கும் குருபகவான் 2.5.10 முதல் உங்கள் ராசியை விட்டு விலகி 2ம் வீட்டில் அமர்வதால் முன்கோபம் குறையும். அலட்சியம் நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துப் போவீர்கள். எவ்வளவு சம்பாதித்தும் கையில் காசு தங்கவில்லையே என்று புலம்பினீர்களே! இனி சேமிப்பீர்கள். பெரிய நோயெல்லாம் இருப்பது போன்ற பிரமை இருந்ததே, பல மருத்துவர்களிடம் அலைந்தீர்களே! இனி நோய் குறையும். பிள்ளைகளின் பிடிவாதமும், தவறான பாதையும் உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே, இனி குடும்பச் சூழ்நிலையை புரிந்து கொள்வார்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அவர்கள் மனதில் உதிக்கும். 1.9.10 முதல் 31.12.10 முடிய உங்களின் சுக, பாக்யாதிபதியான சுக்கிரன் 9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் இந்த காலகட்டம் எதிலும் யோகத்தை தரும். உங்கள் ராசிநாதனான சனிபகவான் 8வது வீட்டில் மறைந்து அஷ்டமத்துச் சனியாக இந்த வருடம் முழுக்க நீடிப்பதால் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். சின்ன சின்ன விபத்துகள், பணம் கொடுத்து ஏமாறுதல், எந்த விஷயத்தையும் உடனடியாக முடிக்க முடியாமல் போகுதல், தர்மசங்கடமான சூழ்நிலை என சில நேரங்களில் திணறுவீர்கள். எரிச்சல், முன்கோபம் என வரக்கூடும். ஆனால் உங்கள் ராசிநாதனை 2.5.10 முதல் குருபகவான் (7.11.10 முதல் 20.11.10 வரையுள்ள காலம் தவிர) பார்த்துக் கொண்டே இருப்பதால் கெடுபலன்கள் குறையும். தொடர் முயற்சியாலும் வி.ஐ.பிகளின் ஆதரவாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். வருடம் முழுவதும் ராகுபகவான் லாப வீட்டில் தொடர்வதால் எதிர்பாராத பணம் வரும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். நெடுங்காலமாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த வெளிநாட்டுப் பயணம் கூடி வரும். கேதுபகவான் 5ம் வீட்டில் தொடர்வதால் தூக்கம் குறையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த பயம் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்தில் அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். தாய்மாமன் வகையில் மனத்தாங்கல் வரும். ஆன்மிகத்தில் மூழ்கி முத்தெடுப்பீர்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். நினைத்தபடி கல்யாணம் முடியும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களே! விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். உயர்கல்வியிலும் வெற்றியுண்டு. வியாபாரிகளே! மற்றவர்களை நம்பி ஏமாந்தீர்களே, கடை வாடகையைக் கூட தரமுடியாதபடி தொழில் முடங்கியதே, இனி அவற்றிலிருந்து மீள்வீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நல்ல லாபம் உண்டு. வராது என்றிருந்த பழைய பாக்கிகள் இனி வசூலாகும். வேலையாட்களை விட்டுப் பிடியுங்கள். அவர்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவறவிடாதீர்கள். உத்யோகஸ்தர்களே, உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் தந்திரத்தை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளை போராடிப் பெறுவீர்கள். உங்களைப்பற்றி புகார் சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி உங்கள் அன்புக்கு கட்டுப்படுவார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு வைகாசி, கார்த்திகை மாதங்களில் கிட்டும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் வந்தமையும். கலைஞர்களே, வசதி, வாய்ப்புகள் உயரும். ஆனால், வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது. அரசியல்வாதிகளே, தலைமையுடன் விவாதம் வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. விவசாயிகளே, பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த சண்டை தீரும். விளைச்சல் பெருகும். இந்த விக்ருதி ஆண்டு குடத்திலிட்ட விளக்காக குன்றிப்போய் இருந்த உங்களை கோபுரத்தில் உயர்த்தி வைக்கும். பரிகாரம்: பூசம் நட்சத்திர நாளில், திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் மாரியம்மனுக்கு விளக்கேற்றி வைத்து வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். வசதி கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.